தனது கையைப் பிடித்து வேகமாக இழுத்ததால் பொறுமை இழந்து பெண்ணை அடித்த போப் பிரான்சிஸ் தனது செலுக்காக மன்னிப்பு கோரி யுள்ளார்.
புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் ஆண்டவரை காண ஏராளமான மக்கள் நின்றிருந்தனர். அப்போது பலருக்கு கை கொடுத்த போப், புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் போப்புக்கு கைகொடுக்க ஆசைப்பட்டு, போப்பின் கையை வேகமாக இழுத்தார். இதில் வலி தாங்க முடியாமல் வேகமாக கையை உதறினார்.
மேலும் பொறுமை இழந்து அந்தப் பெண்ணின் கைகளில் அடித்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல சமயங்களில் நாம் பொறுமையை இழந்து விடுவதாக தெரிவித்துள்ள போப் பிரான்சிஸ், அன்பு மட்டுமே நம்மை சாந்தப் படுத்தும் என கூறியுள்ளார்.
வாடிகனில் புத்தாண்டு கொண்டாட்ட த்தின் போது தனது கையை பிடித்து இழுத்த பெண்ணிடம் கோபமாக நடந்து கொண்டதற்கு போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Pope Francis smacks woman's hand to free himself from her grip https://t.co/8nNYWBtJay pic.twitter.com/swzMEvAzXH— CNN (@CNN) January 1, 2020
Thanks for Your Comments