சருமம் பளபளக்க உதவும் பிராணயாமா !

0
அழகை விரும்பாதவர்கள் யார்… அழகாக இருக்க விரும்பாத வர்களும் யார்?எல்லோரும் விரும்பினாலும் அதற்கான முயற்சிகளில் எல்லோரும் ஈடுபடுவதில்லை என்பது தான் உண்மை. 
சருமம் பளபளக்க உதவும் பிராணயாமா !
முறையான உறக்கம், போதுமான உடற்பயிற்சி, சத்துமிக்க உணவு என சரியான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகி றவர்கள் அழகாகவே இருப்பார்கள். 

இத்துடன் இன்னொரு எளிமையான டிப்ஸும் இருக்கிறது. பிராணயாமா என்கிற மூச்சுப் பயிற்சி செய்தால் 

சருமம் தொடர்பான நோய்கள் வராமல் தவிர்க்கப் படுவதுடன் பளபளப் பாகவும் மாறும் என்று நவீன ஆராய்ச்சி யாளர்கள் பரிந்துரைக் கிறார்கள். 

சருமம் அழகாக பல்வேறு செயற்கை யான வழிமுறை களை கையாண்டு வருகிறோம். இதற்காக சந்தையில் பல வகையான க்ரீம்களும், மருந்துகளும் கிடைக்கின்றன. 

விதவிதமான மேக் அப் சாதனங்களு க்கும் நாட்டில் பஞ்சமில்லை. ஆனால், இவை எல்லாம் இயல்பானதும் அல்ல; நிலையானதும் அல்ல.

‘மேக் அப் செய்யும் நேரத்தில் பிராணயாமா செய்து பாருங்கள்’ என்பது தான் புதிய ஆலோசனை. சரி... பிராணயாமா செய்யும் மாயம் என்ன? 

பிராணயாமா என்பது சுவாசத்தைக் கட்டுப் படுத்தும் ஒரு பயிற்சி மட்டுமே அல்ல. இது உடலை சுத்தப்படுத்தும் Purification technique. பிராணயாமா நாடியைச் சுத்திகரிக் கிறது. 

உடலின் எனர்ஜி மையத்தையே ‘நாடி’ என்று யோகாசன நிபுணர்கள் குறிப்பிடுகி றார்கள். 
இந்த நாடி மையம் சீரான சுவாசத்தால் சுத்தப் படுத்தப் படுகிறது. இதை மருத்துவ உலகம் தனது பாணியில் குறிப்பிடுகிறது. 

உடலின் லிம்பாட்டிக் சிஸ்டம் (Lymphatic system) என்பது உடலின் நச்சுக் களை நீக்கும் பணியினைச் செய்யும் முக்கிய அமைப்பு. 

இதில் இருக்கும் Lymph nodes வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்து, தொற்றுக் களுக்கு எதிராகப் போராடும் குணம் கொண்டது. 
சருமம் பளபளக்க உதவும் பிராணயாமா !
பிராணயாமா இந்த லிம்பாட்டிக் சிஸ்டத்தின் செயல்பாட்டை மேம்படுத்த கிறது.

அதே போல் உடலின் Parasym pathetic nervous system பகுதியையும் பிராணயாமா ஒழுங்கு படுத்துகிறது.

இதன்மூலம் சாதாரண முகப்பரு முதல் எக்ஸீமா வரை யிலான சரும நோய்கள் வருவது தடுக்கப்படும். 

பிராணயாமா நரம்பு மண்டலத்து க்கும், செரிமான மண்டலத்துக்கு மிடையே ஓர் அச்சாணி யாகவும் இருக்கிறது. இதை பல ஆய்வுகளும் குறிப்பிட்ட ருக்கின்றன. 

இதன் மூலம் உடல் செல்கள் முதிர் வடைவதும் தடுக்கப் படுகிறது. எனவே, முறைப்படி ஒரு நிபுணரிடம் கற்றுக் கொண்டு பிறகு பிராணயாமாவை செய்ய முயலுங்கள். 
ஏனெனில், பிராணயாமா வில் கபாலபதி, பாஸ்ட்ரிகா, உஜ்ஜயி போன்ற பல வகைகள் இருக்கின்றன. அழகோடு ஆரோக்கியமும் அமைதியும் கிடைக்கும் என்றால் தாராளமாக முயற்சிக்கலாம்தானே!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings