மெக்சிகோ நாட்டில் உள்ள பல சிறைச் சாலைகளில் அளவுக் கதிகமான கைதிகள் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் தொடர்பாக விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் இங்குள்ளனர்.
நாட்டில் உள்ள பல சிறைகள் போதுமான படுக்கை மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் மாட்டு கொட்டில் களுக்கு இணையாக உள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மெக்சிகோ நாட்டின் வடக்கில் ஜகாடெகாஸ் நகரிலுள்ள செரெரெஸ்கோ பகுதியில் அமைந்துள்ள சிறையில் கைதிகள் திடீர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது. இதில் 16 கைதிகள் கொல்லப் பட்டனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Thanks for Your Comments