ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல் !

0
புத்தாண்டான இன்று அதிகாலை முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. கிலோமீட்டருக்கு ஒரு காசு முதல் 4 காசு வரை உயர்ந்துள்ளது. 
ரயில் கட்டணம் உயர்வு


இதன் காரணமாக சென்னை -மதுரை இடையே 2வகுப்பு இருக்கை கட்டணம் தோரயமாக 15 ரூபாய் முதல் வகுப்பு ஏசி கட்டணம் 280 வரை உயர்ந்துள்ளது, 

ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்கி வருவதால் மத்திய அரசு கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

வரவை விடஅதிக செலவு இருப்பதன் காரணமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது. 

இன்று முதல் ரயில் கட்டணம் அமலுக்கு வந்துள்ளது, புறநகர் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட வில்லை. சீசன் டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்பட வில்லை. 

சாதாரண ஏசி அல்லாத ரயில்களில் 2ம் வகுப்பு இருக்கை கட்டணம், 2ம் வகுப்பு தூங்கும் கட்டணம், சாதாரண முதல் வகுப்பு ஆகியவை கிலோ மீட்டருக்கு ஒரு காசு உயர்த்தப் பட்டுள்ளது. 

ஏசி அல்லாத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2ம் வகுப்பு உட்காரும் மற்றும் தூங்கும் வசதி ரயில்களுக்கு கிலோ மீட்டருக்கு 2 காசு உயர்த்தப் பட்டுள்ளது. 

ஏசி சேர் கார், ஏசி 3ம் வகுப்பு, ஏசி 2ம் வகுப்பு, ஏசி முதல் வகுப்பு கட்டணங்கள் கிலோ மீட்டருக்கு 4 காசுகள் உயர்த்தப் பட்டுள்ளது. இந்த உயர்வு மத்திய அரசு ஒப்புதல்அளித்துள்ளதால் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings