செவ்வாய் கிரகத்தில் களமிறங்கும் ரோபோட்டிக் ரோவர்கள் !

0
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதில் அடுத்த பாய்ச்சலாக ரோபோட்டிக் ரோவரை கொண்டு ஆய்வு செய்ய, 2020-ஆம் ஆண்டு களமிறங்கு கின்றன வளர்ந்த நாடுகள். அதற்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பதை அறிந்து கொள்வதில் உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. 

இந்தியா உள்பட பல நாடுகள் செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் இருந்தே வெற்றிகரமாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. 

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மட்டுமே செவ்வாயில் லேண்டரை 4 முறை தரையிறக்கி ஆய்வு செய்துள்ளது.

இந்நிலையில், வரும் ஜூலை மாதம் நாசா அனுப்பவுள்ள ரோவர் செவ்வாயில் ஆய்வுகளை மேற்கொண்டு பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர இருக்கிறது. 
அதன் மூலம் செவ்வாயில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப் படும். 

இதே போல, சீனா, ஜூன் மாதம் முதல் முறையாக செவ்வாய் கிரகத்திற்கு லேண்டரை அனுப்ப திட்டமிட்டுள்ளது. பீஜிங்கில் அதற்கான பயிற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஐரோப்பாவும், ரஷ்யாவும் இணைந்து பணியாற்றி வரும் ExoMars திட்டத்தில் நாசாவை விஞ்சும் வகையில்,

பாறைகளை துளையிட்டு மணலை எடுத்து வரும் வகையில் ரோவர் வடிவமைக்கப் பட்டுள்ளது. 

இதன் மூலம் நுணுக்கமாக ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். 

ரோவரை வெற்றிகரமாக களமிறக் குவதற்கு பாராசூட்களை கொண்டு பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன

மனிதனை செவ்வாய்க்கு அனுப்பாமல் ஓயமாட்டோம் என போட்டிபோடும் வளர்ந்த நாடுகளுக்கு மத்தியில், விண்வெளி ஆராய்ச்சியில் காலடி எடுத்து வைத்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், 

நெத்திலி மீன் ரெட் கிரேவி செய்வது எப்படி?

செவ்வாயின் சுற்று வட்டப் பாதையில் ஆய்வு செய்யும் ஆர்பிட்டரை ஜூலையில் விண்ணில் செலுத்த இருக்கிறது. இத்திட்டத்திற்கு நம்பிக்கை என பெயரிடப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings