பிரிட்டன் இளவரசர் ஹாரி தனது மனைவி மேகன் மற்றும் எட்டு மாத குழந்தையுடன் ராஜ்ஜியத்தை விட்டுப் பிரிவதாக அறிவித்துள்ளார்.
குடும்ப ஒற்றுமைக் காக பிரிட்டன் ராணி எலிசபெத் மகன் மற்றும் பேரன்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் இருவரும் ராஜ வாழ்க்கை வேண்டாம் என்றும் தனியாக சுதந்திரமாக உழைத்து வாழ விரும்புவதாக சமீபத்தில் அறிவித்தனர்.
தங்களுக்கு எவ்வித பதவியும் சொத்தும் வேண்டாம் என்றும் அவர்கள் இருவரும் அறிவித்தனர்.
ஆனால், பிரிட்டன் அரச குடும்பத்தில் இது வரையில் நிகழாத ஒரு சம்பவம் என்பதால் அரச குடும்பம் மட்டுமல்லாது பிரிட்டன் நாடே ஒருவித கலக்கத்துக்கு உள்ளாகி யுள்ளது.
ஹாரி தனது மனைவியுடன் கனடாவில் வசிக்கப் போவதாகவும் தெரிவித்து விட்டார்.
இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத் தனது மகன் இளவரசர் சார்லஸ் மற்றும் பேரன்கள் வில்லியம்ஸ், ஹாரி உடன் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
ஹாரி- மேகன் விரும்பும் இந்த மாற்றத்துக்கு தான் சம்மதிப்பதாகவும்
அதே நேரம் குடும்ப ஒற்றுமை உடையாமல் இருக்கவும் இந்த பேச்சு வார்த்தையை மேற்கொள்ளவ தாக ராணி தெரிவித்துள்ளார்.
அதே நேரம் குடும்ப ஒற்றுமை உடையாமல் இருக்கவும் இந்த பேச்சு வார்த்தையை மேற்கொள்ளவ தாக ராணி தெரிவித்துள்ளார்.
கனடாவில் பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குடியேற வருவது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட் கூறுகையில், “அரச குடும்பத்தார் எங்கள் நாட்டுக்கு வருவதை மக்கள் வெகுவாக ஆதரித்து வருகின்றனர்.
ஆனால், அவர்களுக்கான பாதுகாப்பு, அதற்கான செலவு ஆகியவை குறித்து நாங்கள் கலந்து ஆலோசிக்க வேண்டி யுள்ளது” என்றுள்ளார்.
Thanks for Your Comments