சேலம் மாவட்டத்திலுள்ள மல்லூர் அருகே இருக்கும் ஏர்வாடி காமாட்சி காடு பகுதியைச் சார்ந்தவர் பழனியப்பன். இவரது மகனின் பெயர் வெங்கடேசன் (வயது 17).
இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்த நிலையில், வெங்கடேசன் நாமக்கல் மாவட்டத்தி லுள்ள ராசிபுரம் தொட்டியங் குலம்
பஞ்சாயத்துக் குட்பட்ட முனியப்பன் கோவில் வறண்ட ஏரி பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்துள்ளார்.
பஞ்சாயத்துக் குட்பட்ட முனியப்பன் கோவில் வறண்ட ஏரி பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்துள்ளார்.
இதனை கண்ட பொதுமக்கள் இது குறித்து காவல் துறையினரு க்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மாணவனின் உடலை பார்வை யிட்டனர்.
பின்னர் அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரிய வந்தது.
மோப்ப நாயும் வரவழைக்கப் பட்டு சோதனை மேற்கொள்ளப் பட்ட நிலையில், வெங்கடேசன் உடலானது கைப்பற்றப்பட்டு சேலம் மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைக்கப் பட்டது.
இது தொடர்பாக வெங்கடேசனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து, அவரது உடலை கண்டு கதறி அழுதனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக கீரனூர் கிராம நிர்வாக அலுவலர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து காவல் துறையினர் வெங்கடேசனை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று விசாரணை நடத்தி வந்த நிலையில், முதற்கட்ட விசாரணையில்
அங்குள்ள முனியப்பன் கோயில் பகுதியில் வசித்து வரும் பொது மக்களிடம் கொலை நடப்பதற்கு முன்னதாக வெங்கடேசனை பார்த்தார்களா?
என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரது நண்பர்கள் யாரும் இப்பகுதியில் உள்ளனரா? என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவருக்கு முன் விரோதம் எதுவும் உள்ளதா? எதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார்? என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.
Thanks for Your Comments