டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகம் நேற்று இரவு போர்க்களம் போல் காட்சி யளித்தது.
ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியான வீடியோக்களும் புகைப்படங் களும் அதிர்ச்சி யளிப்பதாக இருந்தன.
வீடியோ ஒன்றில் `முகத்தில் முகமூடி அணிந்தபடி சிலர் கைகளில் இரும்புக் கம்பிகள், குச்சிகளுடன் சுற்றி வந்தது’ அதிர்ச்சி யளிப்பதாக இருந்தது.
நள்ளிரவில் ரத்தக் காயங்களுடன் மாணவர்கள் மருத்துவ மனைக்கு தூக்கிச் செல்லப் பட்டனர். இந்தத் தாக்குதலு க்குப் பிறகு ஜே.என்.யூ வளாகம் முழுவதும் போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.
நூற்றுக்கும் அதிகமான நபர்கள் முகமூடி அணிந்தபடி பல்கலைக்கழக வளாகத்து க்குள் வந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டுகிறது ஜே.என்.யூ மாணவ அமைப்பு.
பா.ஜ.க மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் மேலும் சிலர் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்திய தாகவும் கூறுகிறது இடதுசாரிகள் மாணவர்கள் அமைப்பு.
பல்கலைக் கழகத்தில் நேற்று நடந்த தாக்குதல் சம்பவத்தில் 28 மாணவர்கள் காயமடைந் துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை யடுத்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கிருந்த மாணவர்கள் சிலர் வெளியேறி யுள்ளனர்.
`பல்கலைக் கழகத்தில் நிலைமை மோசமாக இருக்கிறது. அதனால் நாங்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருந்து வெளியேறு கிறோம்’ என்றனர் மாணவர்கள்.
ஜே.என்.யூ -வில் இந்த மோதல் சம்பவம் சனிக்கிழமை காலையே அரங்கேறி யுள்ளது.
விடுதிக் கட்டண உயர்வு, செமஸ்டர் தேர்வு கட்டண உயர்வு ஆகிய வற்றின் காரணமாக நவம்பர் மாதத்தில் இருந்து ஜே.என்.யூ நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜே.என்.யூ அமைப்புத் தலைவர் ஆய்ஷி கோஷ் தலைமையில் பல்கலைக்கழக தகவல் தொடர்பு அறைக்கு அருகே போராட்டம் நடந்து வந்தது. மாணவ, மாணவிகள் அந்த அறைக்கு அருகில்தான் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் தான், சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த விளக்குகள் அணைக்கப் பட்டுள்ளன.
40-க்கும் மேற்பட்ட நபர்கள் முகமூடி அணிந்த படியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படு கிறது.
இதைத் தடுக்கச் சென்ற ஆய்ஷி கோஷின் கன்னத்தில் அறைந்துள்ளனர்.
இதைத் தடுக்கச் சென்ற ஆய்ஷி கோஷின் கன்னத்தில் அறைந்துள்ளனர்.
அந்தக் கும்பல் இடதுசாரி மாணவர் களைக் குறி வைத்து விடுதிக்குள் சென்று தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட வில்லை என்கின்றனர் ஜே.என்.யூ மாணவர் அமைப்பினர். தகுதியில்லாத நபர்களை துணைவேந்தர் பணிக்கு எடுத்தார்.
துணை வேந்தருக்கு ஆதரவாக அவர்கள் சிறப்பாக செயல் படுவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் மாணவர்கள்.
சனிக்கிழமை நடத்திய தாக்குதலின் போது எஸ்.ஃப்.ஐ-யைச் சேர்ந்த செயற் பாட்டாளர்கள் ப்ரீத்தி, ஆனந்த், சுரேஷ், தேவ் வாசு, கிருஷ்ண பிரியா ஆகியோர் காய மடைந்தனர்.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மற்றும் பல்கலைக்கழக செக்யூரிட்டிகள் திட்ட மிட்டே இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டப் பட்டது.
புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாவலர்கள் கடந்த சில மாதங்களாகவே மாணவி களிடம் மோசமாக நடந்து கொள்வ தாகவும் மோசமான மற்றும் கீழ்த்தரமான வார்த்தைக ளால் பேசுவதாகவும் மாணவிகள் தரப்பில் கூறுகின்றனர்.
பல்கலைக்கழக வளாகத்து க்குள் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஜே.என்.யூ ஆசிரியர்கள் சங்கம் சார்பில் அமைதிப் பேரணிக்கு (Peace March) மாலை அழைப்பு விடுக்கப் பட்டது.
இந்த நிலையில்தான், மாலை 4.30 மணிக்கு ஒரு கும்பல் பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
மாணவர்கள், பேராசிரியர்கள் மீது கற்கள் மற்றும் இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி யுள்ளனர். இதில் ஜே.என்.யூ மாணவர் அமைப்பின் தலைவர் அய்ஷி கோஷின் தலையில் காயம் ஏற்பட்டது.
பேராசிரி யர்கள் சிலரும் காயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இதையடுத்து, காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 7.30 மணியளவில் பல்கலைக்கழகத்துக்குள் காவல்துறையினர் வந்துள்ளனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் ஒருவர் பேசுகையில், ``பெரியார் விடுதிக்குள் தான் அந்தக் கும்பல் முதலில் நுழைந்தது.
எஸ்.ஃப்.ஐ செயற் பாட்டாளரான சூரி கிருஷ்ணன் முதலில் தாக்கப் பட்டார். ஒரு பெரிய கும்பல் முகத்தை மறைத்துக் கொண்டு இந்தியில் அசிங்கமாகத் திட்டினர்.
நான் அவர்களிடம் பேச முற்படும் போது இரும்புக் கம்பியைக் கொண்டு என் தலையில் தாக்கினர். எனக்கு தலையில் இரண்டு தையல்கள் போடப் பட்டுள்ளது.
கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வீசிய கற்கள் தலையில் தாக்கி யிருந்தால் தலையே இரண்டாக பிளந்திருக்கும்” என்றார்.
மதியத்தில் இருந்தே காவல் துறையினர் பல்கலைக்கழக வளாகத்தில் தான் இருந்தனர்.
ஆனால், தாக்குதல் சம்பவத்தின் போது எந்த நடவடிகையும் எடுக்க வில்லை என்கின்றனர் மாணவர்கள் சிலர்.
ஆனால், தாக்குதல் சம்பவத்தின் போது எந்த நடவடிகையும் எடுக்க வில்லை என்கின்றனர் மாணவர்கள் சிலர்.
பல்கலைக் கழகத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை யடுத்து இரவில் அங்கு மருத்துவக்குழு விரைந்துள்ளது.
முகமூடி அணிந்திருந்த நபர்கள் மருத்துவக் குழுவின் வாகனத்தைத் தாக்கி யுள்ளனர்.
முகமூடி அணிந்திருந்த நபர்கள் மருத்துவக் குழுவின் வாகனத்தைத் தாக்கி யுள்ளனர்.
எய்ம்ஸ் மருத்துவர்கள் 9 பேர் வந்துள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடி களை உடைத்து வாகனத்தைச் சேதப்படுத்தி யுள்ளனர்.
மருத்துவர் களையும் அந்தக் கும்பல் மிரட்டியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ பதிவுகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக் களையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
Thanks for Your Comments