இந்தியாவின் மும்பை மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் இருக்கும் மிரரோடு பகுதியை சார்ந்த 11 வயதாகும் மாணவிகள்
இரண்டு பேர் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற நிலையில், ஒரு மாணவி பெற்றோருக்கு அலைபேசி யில் தொடர்பு கொண்டுள்ளார்.
இந்த நேரத்தில், தங்களை முகமூடி அணிந்துள்ள நபரொருவர் கத்தி முனையில் காரில் கடத்தி செல்வதாகவும்,
இவர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடி வந்ததாகவும், தங்களின் இருப்பிடம் தற்போது தெரிய வில்லை என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளனர்.
ஒட்டுத் துணி இல்லாமல் வீடுகளில் திருட கிளம்பிய வினோத பேர்வழி !
இதனை யடுத்து பதற்ற மடைந்த பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே,
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் உடனடியாக களத்தில் இறங்கி அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை தொடர்ந்து சோதனை செய்து வந்தனர்.
இந்நிலையில், இரவு நேரத்தில் மாணவிகள் இருந்த வரும் வீட்டிற்கு திரும்பவே, இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் மாணவிகளை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், மாணவிகள் நடந்து செல்லும் பாதையில் இருந்த கண்காணிப்பு காமிராக்கள் சோதனையில் மாணவிகளை கடத்தியது தொடர்பான காட்சிப் பதிவுகள் இல்லை.
இதனை யடுத்து மாணவிகளிடம் மேற்கொண்ட விசாரணை யில், வீட்டுப்பாடம் எழுத்தாதால் ஆசிரியர் கண்டித்து, பெற்றோரை பள்ளிக்கு அழைத்து மாணவிகளின் மீது புகார் கூறுவதாக எச்சரித்துள்ளார்.
இதனால் பயந்த மாணவிகள் கடத்தல் நாடகம் அரங்கேற்றி யுள்ளனர். இதனை யடுத்து மாணவிகள் எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.