ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை திடீரென கத்தியால் பலமுறை குத்தி விட்டார் மர்மநபர் ஒருவர்.. குன்னூரை சேர்ந்த பெண்ணுக்கு தான் கனடாவில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது..
உயிருக்கு போராடி வரும் தமிழக மாணவிக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது! நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள புரூக்லேண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சலின் ரேச்சல்.
23 வயத இளம்பெண்.. கனடா நாட்டில் டொரன்டோ நகரில் உள்ள பல்கலைகழகம் ஒன்றில் அறிவியல் பாடப்பிரிவில் உயர்கல்வி படித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு ஆஞ்சலின், வழக்கம் போல் பல்கலை கழகத்திற்கு சென்று படிப்பை முடித்துவிட்டு சாயகாலம் வீட்டிற்கு செல்ல கிளம்பினார்..
லெய்ட்ச் அவின்யூ அசினிபோயினே ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்த போது, பைக்கில் வந்த ஒரு மர்மநபர் ஆஞ்சலினாவை தரதரவென கொஞ்ச தூரம் இழுத்து போனார்.
ரத்த வெள்ளம்
பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஆஞ்சலினை கண் மூடித்தனமாக சரமாரியாக குத்த ஆரம்பித்தார்... தலை, கழுத்து, வயிறு என எல்லா இடங்களிலும் சரமாரியாக குத்தினார்..
கண்ணிமைக்கும் நேரத்தில் இது நடந்து விட்டது.. ஏஞ்சலினா கழுத்தில் அந்த கத்தியே இறங்கி விட்டது.. ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்தது கீழே விழுந்தார்.
தீவிர சிகிச்சை
இதை பார்த்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் சொல்லவும், விரைந்து வந்து மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.. இப்போது ஏஞ்சலினா உயிருக்கு போராடி வருகிறார்..
அவருக்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வருகிறது. கழுத்தில் தான் கத்தி இறங்கி உள்ளது.. பலமான காயம் உள்ளது..
இதனால் மூளைக்கு ரத்த விநியோகத்தை துண்டிக்கும் வகையில் காயங்கள் ஏற்பட்டிருக் கிறதாம்.. இது போக 2 பக்கமும் கீறல்களும் உள்ளன என்கிறார்கள்.
மர்ம நபர்
கத்தியால் குத்தியவர் யார் என்று தெரிய வில்லை.. என்ன காரணம் என்றும் தெரிய வில்லை.. பொது மக்களுடன் உதவியுடன் அந்த மர்ம நபரைப் பற்றி விசாரித்தும் வருகின்றனர்.
அந்த நபர் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவராம்.. வயது 20 இருக்கும் என்கிறார்கள் நேரில் பார்த்தவர்கள்.. ஸ்டைலான கண்ணாடியை அணிந்திருந் தாராம்.. அவரை கனடா போலீஸார் தேடி வருகின்றனர்.
பட்டதாரி
இந்த மே மாசம் படிப்பு முடிந்து பட்டம் பெற இருந்தார் ஆஞ்சலினா.. மகள் பட்டம் படித்து நாடு திரும்புவார் என்று ஆவலுடன் காத்திருந்த பெற்றோர்
தலையில் இப்படி ஒரு இடி இழுந்துள்ளது குன்னூர் மக்களை மட்டு மல்லாமல் தமிழக மக்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
இந்த சம்பவம் நடந்து சில தினங்கள் ஆகிவிட்டன.. ஆனாலும் குன்னூரில் உள்ள இவரது பெற்றோருக்கு நேற்று தான் தகவலை சொல்லி உள்ளனர்..
இதை கேட்டு பதறிபோன பெற்றோர் கனடா செல்ல சென்னைக்கு வந்திருக்கி றார்கள்.
வெளியுறவு துறை
இவர்களது விசா கிடைப்பதில் தாமதம் ஆகிறது என்று சொல்லப் படுகிறது. விரைவாக விசா கிடைக்க உதவ வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உதவியை நாடியுள்ளனர்.
ஏஞ்சலின் பெற்றோருடைய செல்போன் எண்ணை குறிப்பிட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு டுவிட்டரில் உதவி கேட்கப் பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிவிட்ட தாவது:
அதிர்ச்சி
'கனடாவின் டொரோண்டோவில் இந்திய மாணவி ரேச்சல் ஆல்பர்ட் மீதான மோசமான தாக்குதலை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி யடைந்தேன்.
அவருடைய குடும்பத்தி னருக்கு எளிதில் விசா கிடைக்க நான் வெளிவிவகார அலுவலர்க ளிடம் கேட்டுள்ளேன்.
அவருடைய குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்று செல்பொன் எண்களைக் குறிப்பிட்டு பதிலளித்துள்ளார்.
Deeply shocked to learn of the serious attack on Rachel Albert, an Indian student in Toronto, Canada. Am asking MEA officials to help with her family’s visa. Family members may immediately contact us on +91 9873983884. https://t.co/wPno3V5aTv— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 24, 2020