அவரின் சுயரூபம் தெரிந்தும் - வியாபாரி கொலையில் கதறியழுத பெண் !

0
சென்னை புது வண்ணாரப் பேட்டை துறைமுகம் குடியிருப்பு அம்மணி அம்மன் திட்ட சாலையில், சாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்த அம்மன் சேகர் (59), கடந்த டிசம்பர் 23-ம் தேதி கொலை செய்யப் பட்டார். 
வியாபாரி கொலையில் கதறியழுத பெண்

இந்த வழக்கை விசாரித்த புதுவண்ணாரப் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிந்து விசாரித்தார். 

கொலை வழக்கில் 23 வயது இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

தற்போது அந்தப் பெண்ணை ஒருநாள் காவலில் எடுத்துப் போலீஸார் விசாரித்தனர். 

விசாரணையில், `அம்மன் சேகரை எதற்காகக் கொலை செய்தேன்?' என்பதை அந்தப் பெண் கூறியுள்ளார்.

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், `கொலை செய்யப்பட்ட அம்மன் சேகரின் மனைவி நாகலட்சுமி அளித்த புகாரில், `தன்னுடைய மகளுடன் படித்த அந்தப் பெண்ணுக்கும் என் கணவருக்கும் இடையே பழக்கம் இருந்தது. 

இந்தத் தகவல் தெரிந்ததும் இரு வீட்டிலும் இருவரையும் கண்டித்தோம். ஆனால், புகைப் படங்களைக் காண்பித்து அந்தப் பெண்ணை என் கணவர் மிரட்டி வந்துள்ளார். 

மேலும், வேறு யாருடன் அந்தப்பெண் பேசினாலும் என் கணவர், அவரைக் கண்டித்துள்ளார். என் கணவரால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்தான் அம்மன் சேகரை கொலை செய்துள்ளார்' என்று குறிப்பிட்டி ருந்தார்.

இதை யடுத்து அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினோம். அப்போது அவர், அம்மன் சேகரை எப்படிக் கொலை செய்தேன் என்பதை விரிவாகக் கூறினார். 

அதன் அடிப்படை யில் அந்தப் பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைத்தோம். 

இருப்பினும், இந்தக் கொலையில் அந்தப் பெண்ணைத் தவிர வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடத்த சிறையில் அடைக்கப்பட்ட அவரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தோம். 

அப்போது அந்தப் பெண் முக்கிய தகவல் களைக் கூறினார். அந்தப் பெண் கூறுகையில்,

`அம்மன் சேகரின் மகளுடன் நான் கல்லூரியில் படித்தேன். அப்போது, நாங்கள் இருவரும் தோழிக ளாகப் பழகினோம்.

ஒரே பகுதி என்பதால் அடிக்கடி அம்மன் சேகரின் வீட்டுக்குச் செல்வேன்.

அப்போது தோழியின் அப்பா என்ற முறையில் அவரிடம் பழகினேன். அவரை அப்பா என்றுதான் அழைப்பேன். 

நான் கேட்பதை யெல்லாம் அவர் எனக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். அதனால் அவர் மீது எனக்குப் பாசமும் மரியாதையும் ஏற்பட்டது. 

அம்மன் சேகர், என்னை சில இடங்களுக்கு பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துள்ளோம்.

நான் வேறு யாருடன் பேசினாலும் என்னை அவர் கண்டிப்பார். எங்கள் இருவரின் பழக்கத்தை என் வீட்டிலும் அவரின் வீட்டிலும் கண்டித்தனர். 

ஆனால், நாங்கள் இருவரும் அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பழகி வந்தோம். கற்பூர வியாபாரத்து க்குச் செல்லும் போது என்னை பைக்கில் அழைத்துச் செல்வார். 
அவரின் சுயரூபம் தெரிந்தும்

அப்போது ஹோட்டலில் நான் விரும்பி ஆர்டர் செய்யும் உணவை வாங்கிக் கொடுப்பார்.

இந்தச் சமயத்தில் எனக்கு வீட்டில் வரன் பார்த்தார்கள். 

அதைக் கேள்விப் பட்டதும் அம்மன் சேகர், என்னை 2-வதாகத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். அதற்கு நான் சம்மதிக்க வில்லை. 

அதனால், என் திருமணத்தை தடுக்க நாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப் படங்களை வெளியிடுவ தாக என்னை மிரட்டினார்.

இதனால் தான் டிசம்பர் 24-ம் தேதி அம்மன் சேகருக்கு 60-வது பிறந்தநாள். அதற்கு கிஃப்ட் கொடுப்ப தாகக் கூறி டிசம்பர் 23-ம் தேதி இரவு கூறினேன்.

அதை நம்பி வந்த அம்மன் சேகரிடம் கண்களை மூடும்படி கூறினேன். பின்னர், அவரின் கண்களிலும் வாயிலும் பசையைத் தடவினேன்.

எரிச்சலால் அவர் துடித்தார். அப்போது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டேன்" என்றார்.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு அந்தப் பெண் போலீஸாரிடம், ``அம்மன் சேகர், எனக்கு டிரஸ், மேக்கப் பொருள்கள், சாப்பாடு ஆகிய வற்றை அதிகம் வாங்கிக் கொடுத்திருக் கிறார். 

சில நேரங்களில் என்னுடன் நெருக்கமாகப் பழகவும் முயற்சி செய்தார். ஆனால், அதற்கு ஒருநாளும் நான் சம்மதிக்க வில்லை. 

ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அம்மன் சேகரிட மிருந்து என்னைக் காப்பாற்றிக் கொண்டேன்.

அம்மன் சேகரின் இன்னொரு முகம் எனக்குத் தெரிந்ததும் அவரிடமிருந்து விலகியிருக்க வேண்டும். 

ஆனால், நான், அவரிடம் தொடர்ந்து பழகியதால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டது' என்றார் கதறியழுதபடி.

`இந்தக் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா?' என்று அந்தப் பெண்ணிடம் விசாரித்தோம். அப்போது அவர் `நான் மட்டும் தான் கொலை செய்தேன்' என்று ஆவேசமாகக் கூறினார். 

போலீஸ் காவல் முடிந்து அந்தப் பெண்ணை மீண்டும் சிறையில் அடைத்துள் ளோம்" என்றார்.

அந்தப் பெண் கூறியது போல சிசிடிவி காட்சியிலும், சம்பவம் நடந்த போது வேறு யாரும் செல்ல வில்லை என்பதைப் போலீஸார் உறுதிப்ப டுத்தி யுள்ளனர்.

இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings