உத்தரப் பிரதேச மாநிலம் நவாப்கஞ்ச் மாவட்டம் பாய்கம்பூர் கிராமத்தைச் சேந்தவர் வீரேந்திர குமார். இவர் ரூர்கியில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி காயத்ரி. இந்த தம்பதிக்கு 18 வயதில் கேஷவ் என்ற மகன் இருந்தார். இவர் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தவர்.
இந்த நிலையில் கேஷவ் டிக் டாக்கில் அவ்வப்போது வீடியோக் களை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ நாளன்று கேஷவ் தனது தந்தையின் துப்பாக்கியை கொண்டு டிக் டாக் வீடியோ செய்யப் போவதாக தாது தாயிடம் கூறி யுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த தாயிடம் நீண்ட நேரம் வற்புறுத்தி துப்பாக்கியை கேட்டு வாங்கினார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த தாயிடம் நீண்ட நேரம் வற்புறுத்தி துப்பாக்கியை கேட்டு வாங்கினார்.
பின்னர் அதை எடுத்துக் கொண்டு கேஷவ் தனது அறைக்குள் சென்ற சில நிமிடங்களில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் பதறிப் போன காயத்திரி அந்த அறைக்குள் சென்று பார்த்த போது, கேஷவ் ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து கிடந்ததை கண்டு துடிதுடித்து போனார்.
இதை யடுத்து அவரை தூக்கிக் கொண்டு அருகி இருந்த தனியார் மருத்துவ மனைக்கு சென்றனர். அங்கு சோதித்து பார்த்த மருத்துவர்கள் கேஷவ் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.
தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்த கேஷவின் உடலை போலீசாருக்கு தெரியப் படுத்தி விட்டு பிரேத பரிசோதனை செய்வதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
அதற்கு மறுப்பு தெரிவித்த கேஷவின் பெற்றோர் தனது மகனின் மரணம் எதிர் பாராமல் நடந்த விபத்து.
ஆகையால் பிரேத பரிசோதனை செய்ய தேவை யில்லை என கூறி உடலை அங்கிருந்து எடுத்து சென்று பின்னர் தகனம் செய்தனர்.
இந்த சம்பவம் நவாப்கஞ்ச் போலீசாருக்கு எப்படியோ தெரிய வர அவர்கள் வீரேந்திர குமாரிடம் விசாரணை நடத்தினர். பின்னர்
இது குறித்து அவர்கள் கூறுகையில்' சம்பவம் நடந்த அன்று கேஷவ் தனது அப்பா வைத்திருந்த லைசன்ஸ் பெற்ற துப்பாக்கியை கொண்டு டிக் டாக் வீடியோ எடுக்க முயற்சித் துள்ளார்.
அப்போது ரிவால்வரை ஏதிர் பாராமல் அழுத்தியதால் ஒரு குண்டு வெடித்து அவரது தலையை துளைத்துள்ளது.
இதனால் அவர் மரணமடைந் துள்ளார். லைசன்ஸ் பெற்றுள்ள துப்பாக்கியை கொண்டு அலட்சியம் காட்டியதால் வீரேந்திர குமாரின் ரிவால்வரை பறிமுதல் செய்ய வுள்ளோம்' என இவ்வாறு கூறினர்.
Thanks for Your Comments