விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சார்ந்தவர் முத்துக்குமார் (வயது 31). இவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 5 பேருடன் காரில் குற்றாலத்திற்கு சென்றுள்ளார்.
காரினை சுடலைமணி (வயது 30) என்பவர் இயக்கி வந்துள்ளார்.
குற்றாலத்திற்கு சென்ற அனைவரும் உற்சாகத்துடன் குளியல் மேற்கொண்டு, பின்னர் நள்ளிரவு நேரத்தில் ஊருக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.
குற்றாலத்திற்கு சென்ற அனைவரும் உற்சாகத்துடன் குளியல் மேற்கொண்டு, பின்னர் நள்ளிரவு நேரத்தில் ஊருக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், இராசபாளையம் கடம்பன்குளம் பாலத்திற்கு அருகில் கார் அதிகாலை 2 மணிக்கு வந்துள்ளது.
இந்த சமயத்தில், எதிர் திசையில் வந்து கொண்டு இருந்த வேணும் - காரும் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரின் முன்புறம் அப்பளம் போல நொறுங்கிய நிலையில், வாகனங்களில் இருந்த நபர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறித் துடித்தனர்.
பின்னர் இது தொடர்பாக இராசபாளையம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் தகவலை அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளி லில் சிக்கிய நபர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் காரை இயக்கி வந்த சுடலை மணி மற்றும் முத்துக்குமார், ஐயப்பன் (வயது 33), அந்தோணிராஜ் (வயது 30) ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந் துள்ளார்.
இந்த விபத்தில் காரை இயக்கி வந்த சுடலை மணி மற்றும் முத்துக்குமார், ஐயப்பன் (வயது 33), அந்தோணிராஜ் (வயது 30) ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந் துள்ளார்.
காருக்குள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த பிரபு என்பவர் நீண்ட நேரத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு இராசபாளையம் அரசு மருத்துவ மனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக் காக மதுரை கொண்டு செல்லப் பட்டார்.
மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.
காரில் மோதிய வேன் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் இருந்து தென்காசிக்கு சென்று கொண்டு இருந்ததும், வேனில் இருந்த 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்தது.
உயிருடன் எலிகளை சாஸில் தோய்த்து சாப்பிடும் சீன இளைஞர் !
விபத்து நடைபெற்ற பகுதியானது பாலம் என்பதால், அதிகாலை நேரத்தில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த இராசபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.