பயணிகள் அசந்த சமயம் அதிர்ச்சி அளித்த பெண்கள் !

0
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள சம்பை முத்து ரெகுநாதபுரம் பகுதியைச் சேர்ந்வர் குஞ்சரம் (62). நேற்று காலை இவர் தனது ஊரிலிருந்து பேருந்தில் ராமநாதபுரம் வந்துள்ளார். 
ராமநாதபுரம் மாவட்டம்

பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நின்றபடியே பயணித் துள்ளார் குஞ்சரம்.

அந்நேரத்தில் பர்தா அணிந்த இரு பெண்கள் தங்களுக்கு இடையே வந்து சிரமம் இன்றி நிற்குமாறு கூறி யுள்ளனர்.

இதை நம்பி அவர்களுக்கு இடையே நின்று கொண்டிருந்த குஞ்சரம் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை நூதனமாகத் திருடி யுள்ளனர். 

இந்நிலையில் ராமநாதபுரம் பேருந்து நிலையத்து க்குள் பஸ் வந்து விட்டது. அங்கு பஸ் நின்ற நிலையில் அதிலிருந்த பெண்கள் இருவரும் வேகமாக இறங்கி யுள்ளனர். 

இந்நிலையில் குஞ்சரத்தின் சங்கிலியைப் பெண்கள் திருடியதை பயணிகள் சிலர் கவனித் துள்ளனர். இதை யடுத்து சங்கிலி திருடப்பட்டது குறித்து குஞ்சரத்திடம் தெரிவித் துள்ளனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வேகமாகச் செயல்பட்டு பேருந்தில் இருந்து இறங்கிய இருவரில் ஒரு பெண்ணைப் பிடித்தபடி கூச்சலிட்டார். 
அதிர்ச்சி அளித்த பெண்கள்


இதைக் கண்ட மற்ற பயணிகள் அங்கிருந்து ஓடிய மற்றொரு பெண்ணையும் மடக்கிப் பிடித்தனர்.

இதை யடுத்து இருவரையும் கேணிக்கரை போலீஸார் வசம் பயணிகள் ஒப்படைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் முஸ்லீம் பெண்கள் போல் பர்தா அணிந்து அவர்கள் தூத்துக்குடி

அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி என்ற செல்வி, இசக்கியம்மாள் எனத் தெரிய வந்தது. 

இவர்களிட மிருந்து 3 பவுன் தங்கச் செயினைப் பறிமுதல் செய்தனர். 

இதை யடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீஸார், இவர்கள் இருவரும் எங்கெங்கு கைவரிசை காட்டி யுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings