இந்திய விமான போக்குவரத்து துறை அதிகாரிகளை போயிங் நிறுவன நிர்வாகிகள் முட்டாள் என பேசியதாக தகவல் வெளியாகி யுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம் தனது வர்த்தகம் தொடர்பான ஆவணங் களை அந்நாட்டு போக்குவரத்து நிர்வாகம் மற்றும் காங்கிரஸ் சபையில் தாக்கல் செய்துள்ளது.
தற்போது வெளியாகி யுள்ள அந்த அறிக்கையில், இந்தியாவில் 2017-ம் ஆண்டு போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்குவதற்கு
அனுமதி வாங்குவது தொடர்பாக அந்நிறுவன நிர்வாகிகள் இருவர் செல்போன் மெசேஜ் வாயிலாக உரை யாடியதாக குறிப்பிடப் பட்டுள்ளது.
அப்போது, விமானங்களை இயக்குவதற்கான விமானப் போக்குவரத்து இயக்குநரக நிர்வாகிகள் எப்படி முட்டாளாக இருக்கிறார்கள் என ஒருவர் குறிப்பிட்ட தாகவும், அதனை மற்றொருவர் ஆமோதித்த தாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், குரங்கு மேற்பார்வையின் கீழ் போயிங் விமானம் முட்டாள்களால் வடிவமைக்கப் பட்டது போன்ற வார்த்தை களையும் அந்நிறுவன நிர்வாகிகள் பயன்படுத்தியது ஆவணங்களில் உள்ளது.
Thanks for Your Comments