மதுரை கூடல்புதூர் அருகே அப்பாவு முதல் தெருவில் வசித்து வருகிறார் சாலை ஒப்பந்ததாரர் குணசேகரன். இவர் தனது மனைவியுடன் வீட்டிலிருந்த போது டிசம்பர் 27ஆம் தேதி ஐந்து பேர் வந்துள்ளனர்.
தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும், காவல் துறையினர் என்றும் அறிமுகப் படுத்தி யுள்ளனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருவதால் வாக்காளர் களுக்கு வழங்க பணம் மறைத்து வைக்கப் பட்டுள்ளதா என்பதை அறிய வீட்டை சோதனையிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து துப்பாக்கியைக் காட்டி குணசேகரனையும் அவரது மனைவியையும் மிரட்டி யுள்ளனர்.
அவர்களுக்கு அஞ்சி வீட்டிலிருந்த 170 சவரன் தங்க நகை, 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம், 20 ஆயிரம் மதிப்பிலான பத்திரங்கள் ஆகிய வற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
தேவைப் பட்டால் விசாரணைக்கு அழைக்கிறோம் என்று கூறியுள்ளனர். வெளியே போகும் போது வீட்டை வெளியிலிருந்து பூட்டு போட்டுள்ளனர்.
பின்னர்தான் தான் ஏமாற்றப் பட்டுள்ளோம் என்பதை உணர்ந்த குணசேகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் காவல் துறையினர் துப்பாக்கியைக் காட்டி நூதனமாக கொள்ளை யடித்துச் சென்ற ஐந்து பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
Thanks for Your Comments