எதிர்ப்பாளர்களை நாய்களை போல் சுட்டோம் - பாஜக தலைவர் !

0
போராட்டக் காரர்களை நாய்கள் போன்று சுட்டோம் என்ற மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷின் பேச்சுக்கு அம்மாநில முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர்


குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர் கட்சிகளின் எதிர்ப்புகளு க்கு மத்திய பாஜக அரசு நிறைவேற்றி யுள்ளது. 

அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள தால் சட்டமாகி யுள்ளது. இந்த சட்டம் யாருடைய குடியுரிமை யையும் பறிக்காது. 

எனவே இது தொடர்பாக யாரும் அச்சமடைய தேவை யில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனினும், அதில் இடம்பெற்றுள்ள அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக அசாம், திரிபுரா, மேகாலயா, மேற்குவங்கம் என இந்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் தீவிர மடைந்துள்ளது. 

போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக பேருந்துகள், ரயில்கள் என பொதுச் சொத்துக்கள் தீக்கிரை யாக்கப்பட்டன. சில மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 
இதில் சிக்கி உயிரிழப்பு களும் ஏற்பட்டுள்ளன. ஆனால், உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் மூடி மறைக்கப் படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மம்தா பானர்ஜி அரசு நடவடிக்கை எடுக்காதது குறித்து கடுமையாக சாடினார்.

“பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்திய வர்கள் மீது மம்தா பானர்ஜியின் காவல்துறை தடியடி நடத்த வில்லை. துப்பாக்கிச்சூடு நடத்த வில்லை. ஒருவரை கூட கைது செய்ய வில்லை. 


இது என்ன அவர்கள் அப்பா வீட்டு சொத்தா? வரி செலுத்துப வர்களின் சொத்துக்களை அவர்கள் எவ்வாறு சேதப்படுத்த முடியும்” என திலீப் கோஷ் கேள்வி எழுப்பினார்.

போராட்டத்தில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்களை அழித்தவர்கள் தனது கட்சிக்கான வாக்காளார்கள் என்பதால் 

அவர்கள் மீது மம்தா நடவடிக்கை எடுக்க வில்லை என குற்றம் சாட்டிய திலீப் கோஷ், உத்தரப் பிரதேசம், கர்நாடகம், அசாம் என நாங்கள் ஆட்சி (பாஜக) செய்யும் மாநிலங்களில் போராட்டக் காரர்களை நாய்களைப் போல சுட்டுக் கொன்றோம். 

அதே போல் இங்கேயும் சுட்டுக் கொல்ல வேண்டும் என சர்ச்சைகுரிய வகையில் பேசினார்.

அவரது பேச்சுக்கு கடுமையான விமர்சனங் களும் கண்டனக் குரல்களும் எழுந்து வருகின்றன. எதிர்க் கட்சிகள் மட்டுமல்லாது பாஜகவுக் குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பி யுள்ளது.
எதிர்ப்பாளர்களை நாய்களை போல் சுட்டோம்


அந்த வகையில், திலீப் கோஷின் கருத்து அவரது சொந்த கருத்து.

கட்சிக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார். 

ஆனால், சிறிதும் கலக்கம் அடையாத திலீப் கோஷ், தான் தெரிவித்த கருத்து தான் கட்சியின் நிலைப்பாடு.

மேற்கு வங்கத்தில் வாய்ப்பு கிடைத்தால் அப்படித் தான் நாங்கள் கையாள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலை யில், திலீப் கோஷின் பேச்சுக்கு எதிர் வினையாற்றி யுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அவரது பெயரை குறிப்பிடாமல் அதிகமான தோட்டக்களால் சுட வேண்டும் என கூறுகிறார்கள். 
இது அவமானகர மானது என்றார். நான் ஒரு அரசியல் தலைவர். போலீசாரின் துப்பாக்கிச் சூட்டை நான் ஊக்குவிக்க வேண்டும் என நீங்கள் நினைக்கி றார்களா என கேள்வி எழுப்பிய மம்தா பானர்ஜி, 

உத்தரப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுகிறார்கள். அங்கு 23 பேர் கொல்லப் பட்டுள்ளனர். ஆனால், இது உத்தரப் பிரதேசம் அல்ல; மேற்கு வங்கம் என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings