பொங்கல் பண்டிகை 2020 தொடக்கமான போகி பண்டிகை நாம் கொண்டாட வேண்டியதன் அவசியம் என்ன?... முன்னோர்கள் போகி பண்டிகையை எப்படி கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர் தெரியுமா?
போகி பண்டிகை
போகி, பொங்கல் பண்டிகையின் முதல் திருநாளாக வருகின்றது. போகி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாள் கொண்டாடப் படுகிறது.
அதாவது ஜனவரி 13 அல்லது 14ஆம் தேதிகளில் வரக் கூடியதாக இருக்கும். இந்தாண்டு 2020 ஜனவரி 14 (மார்கழி 29) செவ்வாய்க் கிழமை போகிப் பண்டிகை கொண்டாடப் படுகிறது.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு சிறப்பாக போகி கொண்டாடப் படுகின்றது.
போகியின் சிறப்புகள்
பழையன கழிதலும், புதியன புகுதலும் தான் இந்த போகியின் மிக முக்கிய நோக்கம். அதாவது பயனற்ற பழையனவற்றை வெளியேற்றி, விட்டெறியக் கூடிய நாளாக கருதப் படுகின்றது.
பேய் ஓட்டுவதாக கூறிய சாமியார் - கதறி அழுத பெண் !
பழையன வற்றைப் போக்கக் கூடிய இந்த பண்டிகைக்கு போக்கி என்ற பெயர் இருந்தது, அது காலப்போக்கில் மருவி போகி என மாறியுள்ளது.
அந்த கால வழக்கப்படி கடந்த ஆண்டிற்கு நன்றியை தெரிவிக்கும் விதமாகவும், புது ஆண்டை வரவேற்கும் விதமாகவும் போகி பண்டிகை கொண்டாடப் பட்டது.
சுத்தமாகும் வீடு
வீட்டில் உள்ள பழைய தேவைற்ற பொருட்களை புறக்கணித்து, வீட்டில் புதியன வற்றைப் புகுத்த வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படை யிலேயே போகி கொண்டாடப் படுகின்றது.
இதனால் வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களும், குப்பைகளும் ஒழிக்கப்படும். இதன் மூல வீடு சுத்தமாகும்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி வீட்டிற்கு வர்ணம் பூசி அழகுபடுத்துவர். முன்னர் சுண்ணாம்பு பூசி வந்தனர்.
இதனால் வீட்டில் இருக்கும் பூச்சி, வண்டுகள் சுண்ணாம் பினால் அங்கிருந்து ஓடி விடும் அல்லது மடிந்து விடும். இதனால் வீட்டில் இருப்பவர்கள் அதன் தொல்லை களிலிருந்து விடுபடுவார்கள்.
உறவு சிறக்கும்:
அதுமட்டுமல்லாமல் இந்த நாளில் ஒழுக்க கேடுகள். மனக்கசப்புடன் கூடிய உறவு, வேண்டாத தீய எண்ணங்களை நீக்கி, உறவை மேம்படுத்து வதற்கான பண்டிகை இதற்கு ‘ருத்ர கீதை ஞானயக்ஞம்’ என்ற அழைக்கப் படுகிறது.
அக்னியில் பழைய தேவையற்ற பொருட்களை மட்டுமல்லாமல், மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்கள், தீய சிந்தனை களையும் போட்டு பொசுக்கக் கூடிய நல்ல நாள்.
போகி பண்டிகை பூஜை
போகி தினத்தின், வைகறையில் அதாவது அதிகாலையில் ‘நிலைப் பொங்கல்’ நிகழ்வு நடத்த வேண்டும்.
அதாவது வீட்டின் நிலைகளுக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, கூரையில் வேப்பிலை, பூலாப்பூ,, ஆவாரம்பூ சொருகியும், மா இலை தோரணம், தோகையுடன் கூடிய கரும்பு வைத்து அழகு படுத்தி,
தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து பூஜை செய்து, கற்பூர ஆரத்தி காட்டி வீட்டில் இருக்கும் தெய்வங்களை வணங்குவர்.
போகியில் செய்யக் கூடாதது
இந்த பூஜையை வீட்டில் இருக்கும் குடும்ப தலைவி செய்ய வேண்டும்.
இந்த தினத்தில் வடை, பாயசம், சிறு தானியங்கள், போளி, மொச்சை, பருப்பு வகைகள் உள்ளிட்ட வற்றை இறைவனுக்கு படைக்கப்படும்.
என்ன செய்ய வேண்டும்?
வீட்டில் சில தேவையற்ற பொருட்களை அக்னியில் இட்டு எரிக்கலாம், ஆனால் தற்போது பிளாஸ்டிக், டயர்கள் உள்ளிட்டவை எடுக்கப் படுவதால் காற்று மாசுபாடு அதிகரிக்கின்றது.
இவற்றை கண்டிப்பாக செய்யாமல் நம் புவியையும், சுற்றுச் சூழலையும் காப்போம். முடிந்தால் எதையும் எரிக்காமல் இருப்பதே இப்போதுல்ல மாசுபட்ட சூழலில் உகந்ததாகும்.
Thanks for Your Comments