முகமூடிகளுக்காக இரவு பகலாக உழைக்கும் தொழிலாளர்கள்... கரோனா வைரஸ் !

சீனாவின் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாள் இரவில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. 
முகமூடிகளுக்காக இரவு பகலாக உழைக்கும் தொழிலாளர்கள்


நேற்று முன்தினம் 102 ஆக இருந்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை செவ்வாய் நிலவரப்படி 132 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 5,974 ஆக உயர்ந்துள்ளது. அங்கு ஒரே நாளில் 1500 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
சீனா தவிர தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 15 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குல் ஏற்பட்டுள்ளது. ஆனால் உலகில் சீனாவைத் தவிர வேறு எங்கும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. 

உலகின் பல நாடுகளும் கொரோனா வைரஸில் இருந்து தங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் உலக அளவில் முகமூடிகளு க்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை போக்க சீன தொழிலாளர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings