தோல்வியடைய செய்த வாக்காளர்களுக்கு இளைஞர் நன்றி !

0
உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி யடைந்த இளைஞர் ஒருவர் தன்னை தோற்கடித்த வாக்காளர் களுக்கு நன்றி தெரிவித்து ஒட்டிய போஸ்டர் வைரலாகி வருகிறது.
தோல்வியடைய செய்த வாக்காளர்களுக்கு இளைஞர் நன்றி


தமிழகத்தில் நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை என 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏணைய 

மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி களுக்கு மட்டும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 

முதல் கட்டத் தேர்தலில் 77.10 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவாகின.
18 ஆயிரத்து 570 பதவியிடங் களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டனர். 

அது தவிர, 27 மாவட்ட ஊராட்சி களுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங் களுக்கும், 314 ஊராட்சி ஒன்றியங் களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங் களுக்கும், 

9,624 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங் களுக்கும், 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங் களுக்கும் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2ஆம் தேதி முதல் எண்ணப்பட்டு நேற்று வரை நீடித்தது.

மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப் பூர்வ இணைய தளத்தில் பதிவிடப் பட்டுள்ள தரவுகளின்படி, அதிமுக மற்றும் 

அதன் கூட்டணிக் கட்சிகள் குறைவான இடத்திலும், திமுக, மற்றும் கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளன.

அந்த வகையில், மதுரை மாவட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள கேத்துவார்பட்டி 2 வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட முருகேசன் என்பவர் தோல்வி யடைந்துள்ளார். 

ஆனாலும், சற்றும் மனம் தளராத முருகேசன், தன்னை தோற்கடித்த வாக்காளர் களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளார். 

அதில், “நீங்க இப்படி செய்வீங்கனு நான் கனவுல கூட எதிர்பர்க்கல” என முருகேசன் குறிப்பிட் டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.......
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings