சந்தேகத்தால் பாஜக பெண் தலைவியை சுட்டு கொன்ற கணவன் !

கல்யாணமாகி சில வருடங்கள் கழித்து முனேஷூக்கு திடீரென அரசியல் ஆர்வம் வந்து விட்டது.. தனது தோழியின் ஆலோசனை யின் பேரில் பாஜகவில் இணைந்தார்.. 
பெண் தலைவியை சுட்டு கொன்ற கணவன்


கட்சி பணிகளையும் தொடர்ந்து செய்து வந்தார்.. பாஜக மேடை ஏறி முழக்கமிடுவது தான் இவரது ஸ்பெஷாலிட்டியே!

ஆனால், இப்படி மேடைக்கு மேடை தனது மனைவி ஏறி பேசி வருவதையும், வீட்டு வேலைகளை எதுவுமே செய்யாமல், குடும்பத்தை மறந்து கட்சியே கதி என்று கிடந்ததையும் சுனில் விரும்பவில்லை.. 
தேர்தலை யொட்டி மாநிலம் முழுவதும் சுற்றி சுற்றி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது எல்லா வற்றிற்கும் மேலாக, மனைவிக்கு கட்சியில் யாருடனோ தொடர்பு இருப்பதாக வும் சந்தேகம் வந்தது.. 

சந்தேகம் வீட்டில் புயலாக வீசி தம்பதிக்குள் சண்டையும் வந்தது. சம்பவத்தன்று மனைவி தன் சகோதரியுடன் போனில் பேசிக் கொண்டிருந்தார்... 


இதை பார்த்ததும் போனில் யார், என்ன என்றுகூட விசாரிக்காத கணவன், கடுப்பாகி போன சுனில், வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டு கொன்று விட்டார்.

சுனில் ஒரு முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.. துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.. 
ரத்த வெள்ளத்தில் பெண் விழுந்து கிடப்பதை பார்த்ததும் போலீசுக்கும் தகவல் சொல்ல..

அவர்கள் வந்து சுனிலை கைது செய்தனர்..மேலும் துப்பாக்கி லைசென்ஸை யும் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.
Tags:
Privacy and cookie settings