பெரிய கோவில் குடமுழுக்கு - தீவிர பாதுகாப்பு ஏற்பாடு !

வரலாற்று சிறப்பு வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதை யொட்டி தமிழக டி.ஜி.பி. திரிபாதி நேற்று தஞ்சைக்கு வந்தார். 
பெரிய கோவில் குடமுழுக்கு


பின்னர் அவர் போலீஸ் அதிகாரிக ளுடன் சென்று பெரிய கோவிலில் செய்யப் பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை களை ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாளை நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது. 

பக்தர்களு க்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளது. பெரியகோவிலு க்கு வந்த டிஜிபி திரிபாதி கோவிலுக்கு வெளியே நின்றிருந்த போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்
பாதுகாப்பு பணிக்கு திருச்சி மண்டலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து போலீசார் வந்துள்ளனர். 

திருச்சி மண்டல ஐ.ஜி. அமல்ராஜ் தலைமையில் டி.ஐ.ஜி.க்கள் லோகநாதன், பவானீஸ்வரி மற்றும் 10 போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 5500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 


பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி கும்பாபிஷேகத்தை காணும் வகையில் அனைத்து நடவடிக்கை களும் எடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கும்பாபிஷேகம் தொடர்பான பாதுகாப்பு பணி ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. 

முதுகு வலி ஏன் ஏற்படுகிறது? அறிகுறி என்ன?
இதற்கு அவர் தலைமை தாங்கி போலீசார் மத்தியில் பேசினார். இதில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜ், மற்றும் டி.ஐ.ஜி.க்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.
Tags:
Privacy and cookie settings