தம்பி பெரிய ஆளாகி என்ன ஆவிங்க., என்ற கேள்வி நாம் வளர ஆரம்பிக்கும் பருவத்தின் போதே பின் தொடர்கிறது.
சிறு வயதில் ஒரு கனவு, ஏதாவது படம் பார்த்து விட்டு வெளியே வந்தால்., ஹீரோ கதாபாத்திரத்தின் பணியில் சேர வேண்டும் என்ற ஆசை அவ்வப்போதே மாறிக் கொண்டே இருக்கும்.
ஒவ்வொருவருக்கும் கனவு
பெரும் பாலானோருக்கு சின்ன வயதில் போலீஸ் ஆக வேண்டும் என்று ஆசைதான் இருக்கும். அல்லது அப்பா இருக்கும் துறையில் அவரை விட சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அனைத்துக் கட்டங்களை கடந்து வர நாம் எடுக்கும் கல்லூரிப் படிப்பு மிக முக்கியமாக நமது வாழ்க்கையை தீர்மாணிக்கிறது.
டிகிரி கனவு
கல்லூரி படிப்பு நமது வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இன்ஜினியரிங் படிக்கும் சில மாணவர்களிடம் ஆரம்பத்தில் சென்று உங்கள் கனவு என்ன வென்று கேட்டால் அமெரிக்கா போவேன் என்பார்கள்.
நான்காவது ஆண்டில் முதலில் டிகிரியை முடிப்பது தான் எனது கனவு என ஒரு அந்தர் பல்டி இருக்கும்.
நாசா அழைப்பை உதறி தள்ளிய மாணவன்
ஒரு சிலர் மட்டும் தங்களது கனவையே இலக்காக நினைத்து ஒவ்வொரு நிமிடமும் அதற்கான அடியாய் எடுத்து வைப்பார்கள்.
அப்படி ஒரு மாணவன் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு வந்த நாசா அழைப்பையும் உதறி தள்ளி விட்டார்.
சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்
இந்த நிலையில், பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கோபால்ஜி (வயது 19).
இவரது தந்தை பிரேம் ரஞ்சன் குன்வார் விவசாய தொழில் செய்து வருகிறார்.
இவரது தந்தை பிரேம் ரஞ்சன் குன்வார் விவசாய தொழில் செய்து வருகிறார்.
ஏழை குடும்பத்தில் பிறந்த கோபாலுக்கு ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பம் முதலே இருந்தது. அரசு பள்ளியில் படித்த அவர் புதிய முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
தேசிய கண்டுபிடிப்பு
அது மட்டுமின்றி கோபால்ஜி 2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தனது முயற்சி பற்றி கூறினார். இதைத் தொடர்ந்து அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும்,
பின்னர் ஆமதாபாத்தில் உள்ள தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை க்கும் (என்.ஐ.எப்.) அனுப்பப்பட்டார். இங்கு கோபால்ஜி 4 புதிய கண்டு பிடிப்புகளை செய்து காட்டினார்.
4 கண்டுபிடிப்புகள்
அதுமட்டுமின்றி கோபால்ஜி 2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தனது முயற்சி பற்றி கூறினார்.
இதைத் தொடர்ந்து அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும், பின்னர் ஆமதாபாத்தில் உள்ள தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை க்கும் (என்.ஐ.எப்.) அனுப்பப் பட்டார்.
இங்கு கோபால்ஜி 4 புதிய கண்டுபிடிப்புகளை செய்து காட்டினார்.
வாழை மற்றும் காகித உயிர் கலங்கள்
கோபால்ஜி வாழை மற்றும் காகித உயிர் கலங்களுக்கு காப்புரிமைகளை பெற்றுள்ளார். நீர் மின் உயிர் செல், கோபா அலாஸ்கா, போலி பிளாஸ்டிக், லிச்சி ஒயின் போன்ற மற்ற சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் வாழை இலை கழிவில் இருந்து வாழை உயிர் செல், காகித உயிர் செல், அதிக வெப்பத்தை தாங்கக்கூடிய கோபோனியம் அலாய் ஆகியவற்றை உருவாக்கி இருந்தார்.
தனது 10-ம் வகுப்பின்போது இன்ஸ்பயர் என்ற விருதையும் பெற்றார். இதைத் தொடர்ந்து அவருக்கு வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள் வரத்தொடங்கியது.
ஆராய்ச்சி நிறுவனமான நாசா
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கோபால்ஜிக்கு அழைப்பு விடுத்தது.
துபாய், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவையும் அழைப்பு விடுத்தன. இதை யெல்லாம் அவர் கண்டு கொள்ளாமல், இந்தியாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பில்
இது குறித்து கோபால்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், வாழை இலை கண்டு பிடிப்புக்கு பிறகு, வெளி நாடுகளில் இருந்து அழைப்புகள் வரத்தொடங்கியது.
எனது முயற்சிகளுக்கு என்னுடைய தந்தை உதவியாக இருந்தார். கோபோனியம் அலாய் கண்டு பிடிப்புக்கு நாசா அழைப்பு விடுத்தது, ஆனால் அதை நிராகரித்து விட்டேன்.
இந்தியாவுக்கு செய்ய வேண்டும்
அமெரிக்க விஞ்ஞானிகளும் என்னை சந்திக்க வந்தார்கள். இந்தியாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எனது விருப்பத்தை அவர்களிடம் தெரிவித்து விட்டேன்.
இந்திய அறிவியல் மற்றும் புதுமை களுக்காக 12-ம் வகுப்புக்கு கீழ் உள்ள மாணவர்களை ஊக்குவிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன்.
நோக்கம்
பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனநிலையை வளர்ப்பதே எனது முக்கிய திட்டம்.
தற்போது டேராடூனில் உள்ள கிராபிக் எரா பல்கலைக் கழகத்தில் பி.டெக் படிப்பில் சேர்ந்து ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வருகிறேன்.
எனது முக்கிய நோக்கம் 100 ஆராய்ச்சி மாணவர்களை கண்டுபிடிப்பது ஆகும். நாடு முழுவதும் ஒரு குழுவாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தார்.