மார்ச் 22ல் ஊரடங்கு.. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை !

பிரதமர் மோடி ஊரடங்கை கடைபிடிக்க வலியுறுத்தியதை அடுத்து நாளை மறு நாள் (22ம் தேதி) கோயம்பேடு காய்கறி மார்கெட் செயல்படாது என வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
மார்ச் 22ல் ஊரடங்கு


கொரோனா வைரஸ் தொற்று உலகத்தின் ஒட்டு மொத்த மக்களையும் கடுமையாக பாதித்து வருகிறது. இந்தியாவில் இப்போது வேகமாக பரவி வருகிறது.

மூன்று பேருக்கு இருந்த கொரோனா இப்போது 176 பேருக்கு பரவி உள்ளது. இதுவரை இந்தியாவில் நான்கு பேர் இறந்துள்ளனர்.

தமிழத்தில் இதுவரை 3 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. கேரளாவில் 28 பேருக்கு பரவி உள்ளது. நாட்டிலேயே அதிக பட்சமாக மகாராஷ்டிராவில் 45 பேருக்கு பரவி உள்ளது. 

தெலுங்கானாவில் 13 பேருக்கும், டெல்லியில் 10 பேருக்கும், ஹரியானாவில் 15 பேருக்கும் பரவி உள்ளது. இதே போல் கர்நாடகாவில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவிட்டால் உலகமே பேரழிவை சந்திக்கும் அபாயம் உள்ளது. இதையடுத்து உலக சுகாதார அமைப்பு பல்வேறு அறிவுறுத்தல் களை வழங்கி வருகிறது. 
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை


இதே போல் மத்திய அரசும் மாநில அரசுகளும் அறிவுறுத்தல் களை வழங்கி வருகின்றன. இந்நிலையில் வரும் 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கை கடை பிடிக்குமாறு பிரதமர் மோடி மக்களிடம் வலியுறுத்தி உள்ளார்.

இதை ஏற்று சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வியாபரிகள் சங்கத்தினர். வரும் 22ம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் கோயம்பேடு மார்க்கெட் முழுவதுக்கும் விடுமுறை அறிவித்துள்ளனர். 

அன்று ஒரு நாள் மட்டும் செயல்படாது என்றும் அடுத்த நாள் முதல் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings