லுங்கியை மடித்து கட்டி... கொரோனாவால் டீ போடும் அளவிற்கு ஆளான அன்புமணி !

கடைசியில் இந்த கொரோனா அன்புமணியை டீ போட வைத்து விட்டதே என்று நெட்டிசன்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.. லுங்கியை இழுத்து மடித்து கட்டிக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்து டீ போடுகிறார் அன்புமணி...  anbumani has gets teased by corona...
கொரோனாவால் டீ போடும் அளவிற்கு ஆளான அன்புமணி


இந்த போட்டோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே கொரோனா வைரஸுக்கு எதிரான கருத்துக்களையும், ஆலோசனை களையும் முன் வைத்து வருகிறார்கள் டாக்டர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும்! 
பிரதமர் ஊரடங்கு உத்தரவு அறிவிப்பதற்கு முன்பிருந்தே, அதாவது ஒரு வாரத்துக்கு முன்னரே, இதே கோரிக்கையை வலியுறுத்தி வருபவர் எம்பி அன்புமணி ராமதாஸ்.

இந்நிலையில், ஒருநாள் மக்கள் ஊரடங்கு உத்தரவினை மதித்து வீட்டிலேயே பொழுதை பாதுகாப்புடன் கழித்து வருகிறார் அன்புமணி.. இது சம்பந்தமாக ஒரு போட்டோவும் வெளியாகி உள்ளது.. 

கிச்சனில் டீ போட்டு கொண்டிருக்கிறார் அன்புமணி.. டி-ஷர்ட் அணிந்து... லுங்கியை இழுத்து மடித்து கட்டிக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்துள்ளார்.. பால் பாக்கெட்டை பிரித்து பாத்திரத்தில் ஊற்றி... டீ போட தயாராகிறார்.. 
இந்த போட்டோ எப்படி வெளியானது என்று தெரியவில்லை.. ஆனால் டாக்டரும், எம்பியுமான அன்புமணியை கொரோனா டீ போட வைத்து விட்டதே என்று கமெண்ட்கள் வர ஆரம்பித்துள்ளன!
Tags:
Privacy and cookie settings