கொரோனாவுக்கு பயந்து உயிருடன் புதைக்கப்பட்ட கோழிகள் !

கோழிகள் மூலம் கொரோனா பரவுவதாக வெளியான வதந்தி மற்றும் பறவைக் காய்ச்சலால் கோழிகள் விற்பனை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.
கொரோனா பரவுவதாக வெளியான வதந்தி


சீனாவின் ஹூபே மாகாணத் தலைநகர் வுஹானில் இருக்கும் ஓர் இறைச்சி சந்தை யிலிருந்து பரவியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ், தற்போது 123 நாடுகளுக்குப் பரவி யுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த வைரஸ், சீனாவையும் தாண்டி இத்தாலி, ஐரோப்பா போன்ற பல நாடுகளில் அதிக உயிரிழப்பு களை ஏற்படுத்தி வருகிறது.

உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 4,627 ஆகவும், பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,139 ஆகவும் உள்ளது.
உலக சுகாதார அமைப்பு, இந்தக் கொரோனா வைரஸை தொற்றுநோய் பாதிப்பாக அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை 50-க்கும் அதிக மானவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வைரஸ் தொற்றினால், பல நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சி யடைந்துள்ளது. அடுத்த மாதம் 15-ம் தேதி வரை இந்தியா வருவதற்கு எவருக்கும் விசா வழங்கப் போவதில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவைத் தடுக்க அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இறைச்சியின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாகப் பல நாள்களாக வதந்தி பரவி வருகிறது.

இறைச்சியின் மூலம் வைரஸ் பரவுவதில்லை என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்தாலும், அதை வாங்க மக்கள் பயப்படுகிறார்கள்.
உயிருடன் புதைக்கப்பட்ட கோழிகள்


இதனால் பல மாநிலங்களில் இறைச்சி விலை கடுமையாகச் சரிவடைந் துள்ளது. இது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் பறவைக் காய்ச்சலும் வேகமாகப் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த இரண்டு காரணங்களி னாலும் கோழி இறைச்சி விற்பனை முற்றிலும் நஷ்ட மடைந்துள்ளது.

தமிழகத்தில் 90 ரூபாய்க்கு விற்ற உயிருள்ள கோழி, தற்போது 40 ரூபாய்க்கு விற்பனை யாகிறது. உரித்த கோழி 160 ரூபாயிலிருந்து 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
அழகிகள் மேடைக்கு பின்னால் செய்வது என்ன?
பெரிய ஹோட்டல்கள் முதல் சிறிய உணவகங்கள் வரை அனைத்து இடங்களிலும் கோழிக்கறி விற்பனை குறைந்து விட்டதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த நசீர் அகமது மகந்தர் என்ற பண்ணை வியாபாரி, தான் வளர்த்த 6,000 கறிக்கோழிகளை உயிருடன் புதைத்துள்ளார்.

கோழிகள் புதைக்கப்படும் வீடியோ, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


முன்னதாக, ஒரு கிலோ கோழி (உயிருடன்) 50 முதல் 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்ததாகவும், தற்போது 5 முதல் 10 ரூபாய்க்கு விற்கப் படுவதாகவும் நசீர் அகமது வேதனை தெரிவித்துள்ளார்.

வருமான த்தைத் தாண்டி கோழிகளைப் பராமரிப்பதற்கு 6 லட்சம் ரூபாய் வரை செலவாவதால்,

இந்த இழப்பை சமாளிக்க முடியாமல் நஷ்டத்தினால் இந்த முடிவை எடுத்துள்ள தாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு பேட்டி யளித்துள்ளார்.
அதே கர்நாடகாவின் கோலார் மாவட்டத் திலும் ஒரு வியாபாரி 9,500 கோழிக் குஞ்சுகளை உயிருடன் புதைத்துள்ளார்.

கொரோனா வைரஸால் பரவிய வதந்தி யினால், தங்கள் வியாபாரம் நஷ்டமடைந் துள்ளதையே அவரும் காரணமாகத் தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings