அடிக்கடி முகநூலில் வந்து போகும் மேற்கண்ட இந்த புகைப்படம் என் மனதை அதிகமதிகம் கலங்கடிக்கடிக்கவே செய்கிறது.
ஆம் பசி பசியில் உணவு தட்டை நோக்கி ஓடுகின்ற அந்த வேதனை இருக்கிறதே இறைவன் பாதுகாக்க வேண்டும்.
இன்றைக்கு இந்திய நாட்டின் சூழல் #கொரோனா என்கிற இந்த நோய் தொற்றின் மரணத்தை விட பசியின் காரணமாக பட்டினி சாவு அதிகரித்து விடுமோ என்கிற அச்சம் தான் ஏற்படுகிறது.
பசி ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எவரையும் விட்டு வைக்காது.
கஜா புயலின் போது வேதாரண்யம் அருகில் கோடியக்கரை பகுதியில் உணவு விநியோகிக்க சென்ற நேரத்தில் அங்கு இது போன்ற பல காட்சிகளை கண்களால் கண்டு மனவேதனை ஏற்பட்டது.
இதே போன்ற ஒரு சிறுவன் ஒரு மனநோய் பாதிக்கப்பட்ட ஒருபெண் உணவு தட்டை கண்டவுடன் ஓடோடி வந்து அவைகளை பெற்று ஓரிரு நிமிடத்தில் அவைகள் உண்டவிதம் கண்டு ஒருகணம் நாம் கண் கலங்கித்தான் போனோம்
பைத்தியமாக இருந்தாலும் பசியெடுக்கும் தோழர்களே!
பசிக்கு ஜாதி மதமெல்லாம் தெரியாது
பசித்தோருக்கு உணவளிப்போம் படைத்தவனின் அன்பை பெறுவோம். பேஸ் புக் பதிவு..