கை கழுவுவதால் கொரோனா சாகுமா?

நாம் கை கழுவுவதால் கொரோனா மட்டுமல்ல நிமோனியா, இன்புளுயன்சா போன்ற வைரசும் சேர்ந்து சாகும். 
கொரோனா வைரஸ் - coronavirus virus


சோப்பிற்க்கும் தண்ணீருக்கும் எப்படி இந்த சக்தி வந்தது?

எப்படி என்றால் வைரசின் சருமமும் சோப்பின் மூலம் நீங்கள் கை கழுவும் விதத்திலும் இது சாத்தியமாகும். மைக்ரோஸ் கோப் மூலம் கொரோனா வைரஸை பார்த்தால் இப்படி தான் தெரியும் . 

வெளிப்புறம் கிரீடம் போன்றும் (crown - corona ) இதன் உடல் கொழுப்பாலும் (lipids) ஆனது. 

உதாரணம் : 

வெண்ணை பாத்திரத்தை சாதாரண தண்ணீரில் கழுவினால் போகுமா? போகாது அது போலத்தான் கொரோனாவும் சாதாரண தண்ணீரில் கழுவினால் போகாது. இதற்கு சோப்பு வேண்டும். 
எனவே சோப்பு கொண்டு கை கழுவும் போது கொரோனா போய் விடும். கொழுப்பு பசையை கரைக்க சோப் அல்லது ஆல்கஹால் கட்டாயம் தேவைப்படும். 

பாம்புக்கு விஷம் எப்படியோ அது போல வைரசுக்கு கொழுப்பு அவசியம். எனவே வைரஸின் கொழுப்பை சேதபடுத்தினால் கொரோனா அழிந்து விடும். 

கொழுப்பு இல்லாத வைரஸ் மனித செல்லுக்குள் செல்ல முடியாது. ஆகவே கொழுப்பாலான கொரோனா வைரஸை அளிக்க சோப் அவசியம் வேண்டும். 

இதற்கு காரணம் என்ன தெரியுமா? உங்களுக்கு....  

சோப்பை மைக்ரோஸ்க்கோப்பில் வைத்து பார்த்தால் அதன் மூலக்கூறு தலை மற்றும் வால் பகுதியுடன் காட்சியளிக்கும். இது விந்து துளிபோல... ஏன் இந்த அமைப்புடன் இருக்கிறது.

சோப்பின் மூலக்கூறு :
சோப்பின் மூலக்கூறு - soap molecules


தலை தண்ணீருடன் ஓட்டும் வால் பகுதி எண்ணெய் அல்லது கொழுப்பு பசையுடன் ஓட்டும். சோப்பின் மூலக்கூறின் வால் பகுதி நம் கையில் உள்ள வைரஸின் கொழுப்பை தாக்கி நிலைகுலைய செய்கிறது. 
கடப்பாரை கொண்டு ஓங்கி தலையில் அடிப்பது போல இருக்கும். அந்த மாதிரி நீங்கள் சோப்பு போட்டு கை கழுவினால் கொரோனா வைரஸின் தலையில் அடித்து அதை சிதறடித்து போல கொழுப்பால் ஆன கொரோனா வைரஸை சோப்பு போட்டு சிதறடிக்கலாம். 

இதனால் வைரஸின் உடல் சிதறி மரணம் அடைகிறது. சோப்பை கொண்டு நுரைவரும் அளவிற்கு கைகளை தேய்க்க வேண்டும். சோப்பின் நுறை தான் வைரசுக்கு எமன். 

20 வினாடிகள் கை கழுவினால் மட்டுமே இது சாத்தியப்படும். சூடான அல்லது குளிந்த தண்ணீரை விட வெதுவெதுப்பான தண்ணீரே நுரை வர உகந்தது. 
சானிடைசர் - sanitizer


60% ஆல்கஹால் உள்ள சானிடைசர்கள் வைரஸை கொலை செய்யும். ஆனால் சோப் கொலை செய்வது மட்டுமின்றி வைரஸை கையில் இருந்து அகற்றும். 

மேலும் வெறும் தண்ணீரை விட சானிடைசர்கள் சிறந்தது. சானிடைசரை விட சோப்பின் மூலம் கை கழுவுவதே சிறந்தது. 
ஏனெனில் சோப்பானது வைரஸை மட்டுமல்ல கொடிய நோயை உருவாக்கும் வைரஸ் பேக்டீரியாவையும் அழிக்கிறது. 

ஆகவே மக்களே வெளியில் சென்று வந்தால் கண்டிப்பாக சோப்பை கொண்டு நுரை வரும் அளவுக்கு கையை கழுவுங்கள். இது மிகவும் அவசியம். படித்து விட்டு சேர் செய்யுங்கள் மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும்.  தந்தி  டிவி....
Tags:
Privacy and cookie settings