தற்போது எங்கும் கொரோனா வைரஸ் குறித்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக அமலா பாலின் ரகசிய திருமணம் குறித்தும் பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இயக்குனர் பா.விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்தும் செய்து கொண்டனர்.
அதன்பின் அமலா பால் காதலில் இருப்பதாக ஒரு தகவல் பரவியது. அப்போது அதுக்குறித்து மறுப்பு எதுவும் தெரிவிக்க வில்லை.
பின் ஒருமுறை அமலா பால் பத்திரிக்கை ஒன்றிற்கு தனக்கு ஒருவரைப் பிடித்துள்ளதாகவும், தான் உறவில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பாடகரான பாவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் அமலா பாலுடன் திருமணம் செய்த புகைப்படங் களை வெளியிட்டார்.
இந்த புகைப்படங்கள் வெளியிட்ட சில மணித்துளிகளில் பாவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தையே நீக்கி விட்டார்.
இப்போது இரண்டாவது திருமணத்தின் போது நடிகை அமலா பால் அணிந்திருந்த உடைகள், ஆபரணங்கள் மற்றும் சில ஃபோட்டோக் களைக் காண்போம்.
அமலா பால் உடை
நடிகை அமலா பால் நீலம் மற்றும் சிவப்பு கலந்த கண்ணாடி பதிக்கப்பட்ட மற்றும் நூல் வேலைப் பாடுகள் செய்யப்பட்ட பிரைடல் காக்ரா சோளியை அணிந்திருந்தார்.
இந்த அழகான லெஹெங்கா வானது ராஜஸ்தானி பாரம்பரியத்தை வெளிக்காட்டும் வகையில் இருந்தது.
ஆபரணங்கள்
அமலா பால் அணிந்திருந்த ஆபரணங்களைப் பற்றி கூற வேண்டு மானால், இவர் ஆக்ஸிடைடு நெற்றிச்சுட்டி, நெக்லேஸ் மற்றும் காதணிகளை அணிந்திருந்தார்.
மேலும் கைகளுக்கு சிவப்பு நிற வளையலை அணிந்திருந்தார்.
மேக்கப்
அமலா பால் மேற்கொண்டிருந்த மேக்கப்பான கண்களுக்கு கண் மை, உதட்டிற்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டிருந்தது உடைக்கு பொருத்தமாக இருந்தது.
பாவ்னிந்தர் சிங் தோற்றம்
பாடகரான பாவ்னிந்தர் சிங், திருமணத்தின் போது அடர் பிங்க் பார்டர் கொண்ட மஞ்சள் நிற குர்தா மற்றும் நீல நிற பைஜாமா அணிந்திருந்தார்.
மேலும் தலையில் மஞ்சள் நிற ராஜ்தானி ஸ்டைல் தலைப்பாகையை அணிந்திருந்தார்.
முத்தம்
இது மேற்கத்திய ஸ்டைலில் திருமணத்திற்கு பின் தம்பதிகள் முத்தத்தை பரிமாறிக் கொள்வது போல், அமலா பாலும், பாவ்னிந்தர் சிங்கும் முத்தம் கொடுத்துக் கொள்ளும் போது எடுத்த போட்டோ.