பணத்தினை நோக்கி ஓடுகின்ற அவசரமான வாழ்கையில் நாம் சாப்பிடுவதை சில நேரங்களில் தவிர்த்து விடுகின்றோம்.
வயது வித்தியாசம் இல்லாமல் அல்சர்(ulcer) தொல்லையால் அவதி படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இன்று நிறைய பேருக்கு இருக்கும் பிரச்சினை அல்சர்.
அதாவது குடற்புண் இது குடலில் ஒரு விதமான எரிச்சலை ஏற்படுத்தும். சாப்பிடாமல் இருக்கும் சந்தர்ப்பங்களில் இவ்விதமான எரிச்சலை அல்சர் உள்ளவர்கள் உணர முடியும்.
சரியான நேரத்தில் உணவுகளை எடுக்காமையும் சரியான உணவுகளை எடுக்காமையும் நமது வாழக்கையில் ஒரு அங்கமாக இது மாறி விட ஒரு காரணம் ஆகி விட்டது.
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த மிகசிறந்த 8 வழிமுறைகள் :
சரி நாம் இந்த பதிவில் அல்சர் என்றால் என்ன? வர காரணங்கள் என்ன? அல்சர் வருவதற்கான அறிகுறிகள் மற்றும் குணப்படுத்து வதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.
அல்சர் என்றால் என்ன?
மனித உடலின் உணவு தொகுதி மிகவும் பிரம்மிப்பானது. நாம் உணவை உள்ளெடுத்து அவை இரைப்பையை அடைந்தவுடன் அந்த உணவினை சமிபாடு அடைய செய்வதற்கான அமிலங்கள் உடனடியாக சுரந்து விடுகின்றன.
அப்பிடி நாம் வழமையாக உணவை உள்ளெடுக்க வேண்டிய நேரத்தில் உணவை உள்ளெடுக்காமல் விடுவதால் சுரக்கப்படும் அமிலங்கள் நமது இரப்பை தோல் மேற்பரப்பை அல்லது சுவரை பதம்பார்த்து விடுகின்றன.
இதனால் குடலில் ஏற்படும் புண் அல்சர் அல்லது குடற்புண் என சொல்லபடுகின்றது.
பொதுவாக உணவுக்குழாயில் அல்லது முன் சிறுகுடலில் புண்கள் ஏற்படும் போது அவை பெப்டிக் அல்சர்(pepetic ulcer) என அழைக்கப் படுகின்றன.
ஆனால் இரைப்பையில் ஏற்படும் புண்கள் குறிப்பாக காஸ்ட்ரிக் அல்சர் (gastric ulcer) என்று அழைக்கப்படும்.இங்கு நாம் காஸ்ட்ரிக் அல்சர் பற்றியே விரிவாக ஆராயப் போகிறோம்.
அல்சர் வருவதற்கான அறிகுறிகள்
அல்சர் ஏற்படும் போது அவற்றுடன் பல்வேறு அறிகுறிகள் தொடர்புபட்டுள்ளன. அறிகுறிகளின் தீவிரம் வயிற்றில் உள்ள குடற்புண் இன் அளவில் தங்கியுள்ளது..
புண் மிகவும் மோசமாக இருக்கும் பட்சத்தில் அறிகுறிகளும் மிகவும் தீவிரமாக இருக்கும்.
மிகவும் பொதுவான அறிகுறி உங்கள் மார்பு மற்றும் வயிற்று பகுதிக்கு இடையே உள்ள பகுதியில் அல்லது வயிற்றின் நடுவில் ஒரு எரியும் உணர்வு அல்லது ஒரு வலி(stomach pain) ஏற்படும்.
நீங்கள் சாப்பிடாமல் வெறும் வயிறாக இருக்கும் போது வலி மிகவும் தீவிரமாக இருப்பதுடன் இது சில மணி நேரங்களுக்கு நீடிக்கவும் கூட செய்யலாம்.
அல்சர் வயிற்று வலி
சில நேரங்களில் அஜீரண கோளாறுகள் காரணமாகவும் வயிற்று வலி ஏற்படலாம். ஆகவே நாம் வயிற்று வலிக்கான காரணத்தை இனங்கண்டு கொள்ள வேண்டும்.
வயிற்று புண்ணுக்கான அறிகுறிகள் மிகவும் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் ஒரு வைத்தியரை நாடுவது மிகச்சிறந்தது.
சரியான நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் புண்களில் இரத்தப்போக்கு ஏற்படுவதுடன் உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிடும்.
அடுத்தது சாப்பிட்ட பின்னர் ஹார்ட் பர்ண் (heart burn) என்று சொல்லப்படும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். வயிற்று வலியுடன் சேர்ந்து இந்த heart burn ஆகுமாயின் அது குடற் புண்ணுக்கான அறிகுறி தான்.
வாந்தி தொடர்ச்சியாக இருக்குமாயின் அதுவும் அறிகுறியாக இருக்கலாம்.. சில நேரங்களில் இரத்தத்துடன் கூடிய வாந்தியும் ஏற்படலாம்.
அல்சர் கார அறிகுறியாக வாந்தி
உடல் எடை குறைவும் குடற் புண்வருவதற்கான ஒரு அறிகுறி ஆகும். வயிற்றில் ஏற்படும் வலி காரணமாக உணவை சாப்பிடுவதில் விருப்பமின்மை ஏற்படலாம்.
பொதுவாக சாப்பிட்டவுடன் ஏப்பம் வரும்.அந்த ஏப்பம் புளிப்பு தன்மையுடன் வருமாக இருந்தால் அது கூட அல்சருக்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
உணவை ஜீரணமடைய செய்யும் அமிலத் தன்மையான பதார்த்தங்கள் வயிற்றில் இருக்கும். அவற்றின் ஏற்ற தாழ்வுகள் காரணமாக உங்களுக்கு குமட்டல் போன்ற உணர்வும் ஏற்படலாம்.
உங்கள் மலத்தின் நிறம் கருப்பாக இருக்குமாயின் அல்சர் மிகவும் முற்றி விட்டது என்று அர்த்தம்.அப்பிடியான சந்தர்ப்பங்களில் ஒரு மருத்துவரின் சிகிச்சையை பெற்று கொள்வது மிக சிறந்தது.