கும்பகோணம் அருகே மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், தன்னுடைய குடும்பத்தில் நிலவும் பொருளாதார சிக்கலால்
வீட்டின் மேற்கூரையைத் தார்பாய் கொண்டு மூடியுள்ள நிலையிலும் கிராம மக்களுக்கு இலவசமாக மாஸ்க் தயாரித்து கொடுத்து வருகிறார்.
இவரை பலரும் நெகிழ்ச்சியோடு பாராட்டி வருகின்றனர். கும்பகோணம் அருகே உள்ள ஒழுகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். விவசாயியான இவருடைய மனைவி ஆனந்தாயி.
ஆனந்தாயியும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்ட வருவதுடன் அந்தப் பணி முடிந்த பிறகு,
தன் வீட்டிலேயே அரசு பொங்கலுக்கு வழங்கிய இலவச வேட்டி, சேலைகளை கொண்டு மாஸ்க் தயாரித்து, அதனை இலவசமாக ஒழுகச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வழங்கி வருகிறார்.
இவருடைய குடும்பத்தில் பொருளாதார சிக்கல் இருக்கிறது என்பதை அவர் வீடும் வீட்டின் மேற் கூரை தார்பாய் கொண்டு மூடப்பட்டிருப்பதுமே காட்டி விடுகிறது.
ஆனாலும் ஏழை மக்கள் மாஸ்க் வாங்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே, கொரோனா பரவாமல் தடுப்பதற்காகத் தினமும் மாஸ்க் தைத்து கிராம மக்களுக்கு கொடுத்து வரும் ஆனந்தாயியை பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.