முதுகு வலியை குணப்படுத்தி, முதுகெலும்பிற்கு பலமளிக்கும் இந்த ஆசனம் ஆரம்ப நிலை யோகா செய்பவர் களுக்கு சிறிது கடினம்.
ஆனால் இதன் நன்மைகளைப் பற்றி அறிந்த பின் தகுந்த யோகா பயிற்சி யாளரை வைத்து இந்த ஆசனத்தை செய்து கொள்ளவும்.
செய்முறை :
முதலில் ஆழ்ந்து மூச்சை விட்டபடி தரையில் படுங்கள். பின்னர் கால்களை அகல விரித்துக் கொள்ளுங்கள். கைகளை தலைக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள்.
பின் மெதுவாக முதுகை வளைத்து உள்ளங்கை களால் தரையை அழுத்தவும். தரையை உந்தும்போது மெதுவாக நீங்கள் வளைந்து மேலே எழுவீர்கள்.
பின் மெதுவாய் பாதங்களால் தரையை கெட்டியாக பற்றியபடி தலையை தரையில் முட்டு கொடுங்கள். இந்த நிலையில் உங்களை சம நிலைப் படுத்தியபின் மெதுவாக இயல்பு நிலைக்கு வரவும்.
நன்மைகள் :
முதுகெலும்பு பலமாகும். தொடைகள் உறுதி பெறும். மனதை ஒருமுகப் படுத்தும் ஆற்றல் அதிகரிக்கும். தசைகள் வலுவடையும். மன அழுத்தம் குறையும்.
ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் நிதானமாகவும், கவனமாகவும் இந்த ஆசனத்தை செய்யவும். மணிக்கட்டு, இடுப்பு முதுகுப் பகுதிகளில் அடிப்பட்டவர்கல் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.