காபி தர மறுத்த மனைவி தலையில் கொதிக்கும் நீரை ஊற்றிய கணவர் !

காபி போட்டு தர மறுத்ததால்.. ஆவேசமடைந்துவிட்ட தொழிலதிபர், நேராக கிச்சனுக்கு போய், அடுப்பில் இருந்த வெந்நீர் எடுத்து வந்து மனைவி மீது ஊற்றி விட்டார்.
மனைவி தலையில் கொதிக்கும் நீரை ஊற்றிய கணவர்

பெங்களூருவில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. பெங்களூரு புறநகர் தொட்டப்பள்ளப்புரா பகுதியில் ஒரு அப்பார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார் அந்த தொழில் அதிபர்.. 

இவரது மனைவி பெயர் தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 34 வயதாகிறது.. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.. இப்போது ஊரடங்கு என்பதால் குடும்பத்தினருடன் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இந்தநிலையில், தேவியிடம் காபி போட்டு தருமாறு கேட்டுள்ளார் கணவர்.. அதற்கு தேவியோ, வேலைக்காரி லாக்டவுனால் வராமல் நின்று விட்டதால், 

வீட்டில் நிறைய வேலை இருப்பதாகவும், பிறகு வேலையை முடித்து விட்டு வந்து காபி போட்டு தருவதாகவும் சொல்லி உள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த தொழிலதிபர் வேகமாக கிச்சனுக்கு போய் அடுப்பில் கொதித்து கொண்டிருந்த இருந்த வெந்நீரை எடுத்து மனைவி மீது ஊற்றி விட்டார்.

உடம்பெல்லாம் சுடுநீர் பட்டு அலறி துடித்தார் மனைவி.. அந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு தொட்டப்பள்ளப்புரா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர்... 

உடம்பெல்லாம் வெந்து போயுள்ளது அவருக்கு.. 20 சதவீத தீக்காயங்கள் என்றாலும் உயிர் தப்பி விட்டார்.

இதை யடுத்து, பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் தொழிலதிபர் மீது புகார் செய்யப்பட்டது.. இந்த புகாரின் பேரில் தொட்டப்பள்ளப்புரா போலீசாரும் விசாரணை ஆரம்பத்தனர்.. 

ஆஸ்பத்திரியில் உள்ள மனைவியும் போலீசாரிடம் கணவர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
லாக்டவுனால் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளதால் பெரும்பாலானோர் மன அழுத்தத்திற்கு ஆளாகி இப்படி வன்முறையில் நடந்து கொண்டு வருவதாகவும் சொல்லப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings