கொரோனா அழியும் நேரம் சிங்கப்பூர் பல்கலைக்கழகம் தகவல் !

சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உலகில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை மே 20 க்குள் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அழிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. 
கொரோனா அழியும் நேரம் சிங்கப்பூர் பல்கலைக்கழகம் தகவல்

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சேகரித்த தகவல்களை ஆராய்ந்து சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் (எஸ்.யு.டி.டி) இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் எளிதில் பாதிக்கக்கூடிய மீட்கப்பட்ட (SIR) தொற்றுநோய் மாதிரிகளை பகுப்பாய்வு செய்தது. 

அதாவது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சந்தேகத்திற் கிடமான, பாதிக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான நோயாளிகளின் மாதிரிகள் குறித்த தகவல்களை சேகரித்து ஆராய்ந்து தெரிவித்துள்ளது.

கொரோனா பல்வேறு நாடுகளில் திருப்பங்கள் நிகழ்த்திய தேதிகளும் ஆய்வு செய்யப்பட்டது. 

இதன் பின்னர் இந்த வைரஸ் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்று எஸ்.யு.டி.டி தனது ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளது.
முன்னதாக வெள்ளிக்கிழமை, மத்திய அரசு ஊரடங்கை அறிவித்ததை தொடர்ந்து மே 16 க்குப் பிறகு, கொரோனா வைரஸால் புதிதாக நோயாளிகள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தது. 

தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவால் 26500க்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். 

இதில் 6191 பேர் குணம் அடைந்துள்ளனர். 19738 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.நாட்டிலேயே மிக அதிகமாக மகாராஷ்டிராவில் 7600 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கி மே 3 வரை 49 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. 

இந்த ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து நாளை பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
Tags:
Privacy and cookie settings