ராஜநாகம் ஏன் தனித்துவமாக உள்ளது? என்ன காரணம்?

ராஜநாகம் மட்டும் ஏன் மற்ற பாம்பினை விட்டு தனித்துவமாக உள்ளது? என்று வினா எழுப்பப்பட்டுள்ளது.
ராஜநாகம்
இராஜநாகம் இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் அடர்ந்த மூங்கில் காடுகளில் அதிகம் வசிக்கின்றது. தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் இது காணப்படுகிறது.

மற்ற பாம்புகள் எல்லாம் காற்றில் உள்ள வாசனைையை உணர்ந்து இரையையோ எதிரிகளையோ அடையாளம் காணும். 

ஆனால் இராஜநாகம் இத்துடன் தனது பார்வைத் திறன் காரணமாக சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ளதையும் பார்த்து அடையாளம் காணும் கூர்மையான பார்வைத் திறன் கொண்டது.

இது மரங்களின் மீதும் சுலபமாக ஏறி அங்கிருந்தே தூரத்தில் வரும் இரையை கண்டு உணர்ந்து கீழே இறங்கி வந்து கூட தனது இரையை பிடிக்கும் இயல்பு உடையது.

இதன் முக்கியமான உணவு மற்ற பாம்புகள் மட்டுமே, குறிப்பாக சாரை பாம்புகள். இது மட்டுமே உலகிலுள்ள எந்த ஒரு விஷப்பாம்பையும் விட மிக நீளமானதும், பருமனானதும் ஆகும். 
இதன் அதிகபட்ச வளரும் நீளம் 18 அடி. இது தனது உடலின் நீளத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரம் வரை எழுந்து தலையை உயர்த்தி படம் எடுக்கக் கூடியது.

இதன் விஷப்பைகள் மிகவும் பெரியது. சுமார் 2 அவுன்ஸ் விஷம் வரை தேக்கி வைக்க கூடியது.
நல்லபாம்பு, கட்டுவிரியன் பாம்பு போன்றே இதன் விஷம்' நியுரோடாக்சின்' எனும் நரம்பு மண்டல செயல் இழப்பு ஏற்படுத்த கூடியது.

இதன் ஒரு கடியின் போது இதன் நச்சுப் பைகளில் இருந்து சுமார் 6 cc அளவு வரை செலுத்தப்படும் விஷம் ஒரு பெரிய யானைையை கூட 20 நிமிடங்களில் கொல்லக்கூடியது. 

இருப்பினும், நஞ்சின் வீரியம் நல்ல பாம்பின் நஞ்சை விட குறைவு. மேலும் இதன் கடி காரணமாக இறந்தவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவு மிகச்சிலரே.

இதற்கு காரணம் இது மனித நடமாட்டம் இல்லாத அடர்த்தியான காடுகளை மட்டுமே தனது வாழ்விடமாக கொண்டுள்ளதே. இத்துடன் இதன் நகர்வு சுலபமாக பார்க்கும் வகையில் இருப்பதும் மற்றொரு காரணம்.
பாம்புகள்
2001 -ல் பாம்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் இலைகளின் நடுவே ஒரு இராஜநாகம் இருந்த போது ,அறியாமல் இதனை மிதித்து கடிபட்டு இறந்தார் என்பது பதிவு செய்யப்பட்ட ஒரு நிகழ்வு.

மற்ற எல்லா பாம்பு இனங்களுமே அடுத்த பிராணிகளின் வாழ்விடங்களை தனதாக்கி உள்ளே வசிக்கும். ஆனால் இராஜநாகம் மட்டுமே தனது கூட்டை தானே அமைக்கும் திறன் வாய்ந்தது.
இணை சேர்ந்து முட்டைகள் இடும் தருணம் காட்டில் பெண் பாம்பு தனது வாலினால் இலைகளை கூட்டி ஒரு மேடு போல அமைத்து உள்ளே சென்று கூடு அமைத்து, அதில் சுமார் 20 முதல் 40 முட்டைகள் வரை இட்டு அடைகாக்கும்.
இது இரை தேட போகும் சமயம் ஆண் பாம்பு கூட்டை காக்கும் . முட்டைகள் 60 முதல் 80 நாட்களில் பொரித்து சுமார் 50 Cm நீளமுள்ள குட்டிகள் வெளிவரும். வெளிவந்துமே குட்டிகள் பிரிந்து தமது போக்கில் பிரிந்து சென்று விடும்.

சமீப காலமாக இவை அடர்ந்த காடுகளில் இருந்து வெளியேறி கோயமுத்தூர் வனப்பகுதியின் அருகிலுள்ள ஊர்களின் விளை நிலங்களில் அவ்வப்போது காணப்படும் நிகழ்வுகளும் உண்டு.
Tags:
Privacy and cookie settings