தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஒரு சிறுமி (17). அவர் 10 ஆம் வகுப்பு முடித்து விட்டு, அங்குள்ள ஒரு சுய உதவிக்குழு கடன் வழங்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கடன் கொடுப்பது தொடர்பான பணியில் வேலை பார்க்க வேண்டிய சூழல் இருந்ததால், அவர், சரவணன், வேல்சாமி, குகன் உள்ளிட்ட நண்பர்கள் அறிமுகமாயினர்.
ஆனால், அந்தச் சிறுமி அவர்களிட தோழமையுடன் பழகி வந்த போதிலும், அவர்கள் தவறாக நினைத்துப் பழகி யுள்ளனர்.
இந்த விசயம் சிறுமியின் அம்மாவுக்கு தெரிய வந்ததால் அவர்களிடம் பேச வேண்டாம் என சிறுமிக்குத் தடை போட்டார்.
இந்த நிலையில், அவர்கள் அந்தச் சிறுமியின் செல்போனுக்கு அடிக்கடி போன் செய்து தொல்லை செய்துள்ளனர்.
மேலும் கடந்த வாரம் சிறுமிக்குத் தொடர்பு கொண்டு வீட்டை விட்டு வெளியே வருமாறும், இல்லா விட்டால் தீ வைத்துக் கொளுத்து விடுவதாக மிரட்டி யுள்ளனர்.
இதனால் சிறுமி பயந்துபோய் வீட்டுக்குள் தீ வைத்துக் கொள்ள முயன்றுள்ளார்.
அப்போது சிறுமியின் அலறல் குரல் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 இளைஞர்களை போக்ஷோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.