தளர்வுகளுடன் வரும் மாறுப்பட்ட ஊரடங்கு 4.0 !

கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ் மொத்த உலகத்தையும் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாளை முதல் இந்தியா நான்காம் கட்ட ஊரடங்கில் நுழையவுள்ளது.
மாறுப்பட்ட ஊரடங்கு 4.0

மார்ச் 25-ம் தேதி முதல் தற்போது வரை மூன்று கட்டங்களாக சுமார் 50-க்கும் மேற்பட்ட நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப் பட்டது.

ஆனால் நான்காம் கட்ட ஊரடங்கு முன்னர் இருந்ததைப் போல் இல்லாமல் மாறுபட்டதாக இருக்கும் என சமீபத்தில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி கூறியிருந்தார்.

“நாம் சில காலம் கொரோனா வுடன் இணைந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். நாம் கொரோனாவை எதிர்த்துப் போராடுவோம் முன்னேறுவோம்.
இரும்புச் சத்து உணவுகள் உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படுத்தும் தெரியுமா?
மாநிலங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் நான்காம் கட்ட ஊரடங்கு தொடர்பான தகவல்கள் மே 18-க்கு முன்னர் மக்களுக்கு வழங்கப்படும்” என மோடி பேசினார்.

அவரின் கருத்துப்படி இன்று புதிய ஊரடங்கின் விதிமுறைகள் வெளியிடலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த 4-ம் கட்ட ஊரடங்கு எப்படி இருக்கும், மற்ற ஊரடங்குடன் எப்படி இது மாறு பட்டுள்ளதாக இருக்கும் எனச் சில தகவல்கள் வெளியாகி யுள்ளன.

பஞ்சாப், மேற்குவங்கம், தெலங்கானா, மகாராஷ்டிரா, அசாம் ஆகிய மாநிலங்கள் இந்த மாத இறுதி வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளன.
கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டும்

மேலும் மாநிலத்தின் கொரோனா நிலவரத்தை மாநில அரசுகளே முடிவு செய்யும் அதிகாரத்தையும் கோரியுள்ளன.

இது பற்றிப் பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், ‘ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மாநில அரசுகளின் விருப்பமாக உள்ளது.

அதே நேரத்தில் அனைவரும் படிப்படியாகப் பொருளாதார நடவடிக்கை களை மீண்டும் தொடர விரும்புகிறார்கள்.
பச்சை மண்டலங்களை முழுமையாகத் திறப்பது, ஆரஞ்சு மண்டலங்களில் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் கட்டுபாடு மற்றும் சிவப்பு மண்டலத்தில் கடுமையான கட்டுப்பாடு இருக்கும்.

இனி ஊரடங்கு தொடர்பான முடிவுகள் எடுக்கும் அதிகாரம் அந்தந்த மாநில அரசுகளுக்கு வழங்கப் படலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு 4.0 தகவல்கள்!

* நாட்டின் எந்தப் பகுதிகளிலும் பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், சினிமா தியேட்டர்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை திறக்க அனுமதிக்கப் படாது.

சிவப்பு மண்டலங்கள் கட்டுப்பாடு உள்ள பகுதிகளைத் தவிர பிற பகுதிகளில் சலூன், ஆப்டிகல் கடைகள் போன்றவை திறக்க அனுமதிக்கப் படலாம்.

* அடுத்த வாரம் முதல் ரயில்கள் மற்றும் உள்நாட்டு விமானங்கள் படிப்படியாக மற்றும் தேவையின் அடிப்படையில் மட்டுமே இயக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த இரு துறைகளிலும் உடனடியாக முழுமையான திறப்புக்கு வாய்ப்பில்லை.

* ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் உள்ளூர் ரயில்கள், பேருந்துகள், மெட்ரோ சேவைகள் போன்றவை மிகுந்த கட்டுப்பாட்டுடன் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப் படலாம்.

அதே போல் சிவப்பு மண்டலங்களிலும் தனிமைப் படுத்தப் பகுதிகள் இல்லாத இடங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படலாம்.
ஊரடங்கு 4.0 தகவல்கள்!

* நாட்டின் அனைத்து சிவப்பு மண்டலத்திலும் ஆட்டோக்கள், டாக்ஸிகள் ஆகியவை பயணிகளின் எண்ணிக்கையில் கட்டுப் பாடுகளுடன் அனுமதிக்கப் படலாம். 

இந்தப் போக்குவரத்து சேவைகளில் பெரும்பாலானவை தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அனுமதிக்கப் படமாட்டாது.

இதை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவை மாநில அரசே எடுத்துக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்படலாம்.

* ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலங்களில் சந்தைகள் திறப்பதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும்.
ஆரோக்கியமான டயட் பின்பற்றும் போது நினைவில் கொள்ள வேண்டியது !
அதுவும் குறைந்த எண்ணிக்கை யிலான தனிக் கடைகள், நேரக் கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதிக்கப் படலாம்.

அதே போல் அத்தியாவசிய மற்ற பொருள்கள் விற்கும் கடைகளும் கட்டுப் பாடுகளுடன் திறக்கப்படலாம்.

* அனைத்து அரசு அலுவலகங்களும் குறைந்த ஊழியர்களுடன் சுழற்சி முறையில் செயல்பட அனுமதிக்கப் படலாம். அதேபோல் ஐடி நிறுவனங்களும் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப் படலாம்.

இந்த 4 -ம் கட்ட ஊரடங்கில் சிவப்பு மண்டலத்தில் சற்று அதிக கட்டுப்பாடுகள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் பெரும்பாலான சேவைகள் முழுவதும் திறக்கப் படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறப் பட்டுள்ளது.

பழைய தளர்வுகள்!

* தனிநபர்கள் மற்றும் வாகனங்கள் அனுமதி பெற்ற பிறகே இயக்கப் படுகிறது. கார்களில் ஓட்டுநரைத் தவிர மேலும் இருவர் பயணிக்க மட்டுமே அனுமதி. ஆட்டோ, டாக்ஸி, பேருந்து சேவைகளுக்கு அனுமதியில்லை.

* நகர்ப்புறங்களில் உள்ள தொழில்துறை நிறுவனங்கள், ஏற்றுமதி சார்ந்த அலகுகள் ஆகியவை கட்டுப்பாட்டுடன் கூடிய அனுமதிக்கப் பட்டுள்ளன.
பழைய தளர்வுகள்!

மருந்துகள், மருத்துவச் சாதனங்கள், அவற்றின் மூலப்பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் உற்பத்தி அவற்றின் விநியோகச் சங்கிலி ஆகியவை இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளன.

* அத்தியாவசிய மற்ற பொருள்கள் விற்கும் கடைகள், மால்கள், சந்தைகள் ஆகியவற்றிற்கு அனுமதிக்கப் படுவதில்லை.

கிராமப் புறங்களில் உணவு பதப்படுத்தும் அலகுகள் மற்றும் செங்கல் சூளைகள், அனைத்துத் தொழில்துறை மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளன.

* அனைத்து விவசாய நடவடிக்கைகள், விநியோகம், அறுவடை செய்தல், கொள்முதல் மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் அனுமதிக்கப் படுகின்றன.
விளையாட்டில் தோற்றதால் மனைவியின் முதுகெலும்பை உடைத்த கணவன் !
மீன்வளம் உட்பட கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள் முழுமையாக அனுமதிக்கப் படுகின்றன. அதேபோல் அனைத்துத் தோட்ட நடவடிக்கை மற்றும் அதைச் சந்தைப் படுத்த அனுமதிக்கப் பட்டுள்ளது.

* மின்சாரம், நீர், சுகாதாரம், கழிவு மேலாண்மை, தொலைத்தொடர்பு மற்றும் இணையம், வங்கி ஆகிய வற்றில் பொதுப் பயன்பாடுகள், கூரியர் மற்றும் அஞ்சல் சேவைகள் போன்ற பல தொழில் நிறுவனங் களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

ஆனால் சிவப்பு மண்டலங்களில், அத்தியாவசியப் பொருள்களுக்கு மட்டுமே அனுமதிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings