15 வயது கிறிஸ்தவ சிறுமியை, ஒரு கும்பலால் கடத்தி சென்று, தொடர்ந்து 24 மணி நேரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது..
இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பரவி எதிரொலித்ததை யடுத்து, அங்கு போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.
பாகிஸ்தானில் சமீப காலமாக சிறுபான்மை யினராக வாழும் இந்து, கிருஸ்தவ மற்றும் சீக்கிய பெண்கள் கடத்திச் செல்லப்படுவதும்,
அவர்களை கட்டாய மதமாற்றம் செய்து முஸ்லீம் ஆண்களுக்கு திருமணம் செய்து வைப்பதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பாகிஸ்தானில் சிறுபான்மையி னரான இந்துக்கள் அதிகம் வசிக்கும் சிந்து மாகாணத்தில், இந்து பெண்களை இப்படி தொடர்ந்து கடத்திச் சென்று கட்டாய மதமாற்ற திருமணம் செய்வது அதிகரித்தவாறே உள்ளதால், அந்த பகுதி இந்துக்களும் போலீசில் இதை பற்றி புகார்களை அளித்தபடியே உள்ளனர்.
சென்ற வருடம் மட்டும் கிட்டத்தட்ட 28 சிறுபான்மையின பெண்கள் கட்டாயம் திருமணம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களுக்கு ஆளாகி யுள்ளதாக சொல்லப்படுகிறது.
பயங்கரவாதத்துடன், பெண் அடிமைத்தனம், பெண்களை கடத்துதல், சிறுபான்மை யினர் மீது தாக்குதல் போன்றவைகளில் பாகிஸ்தான் ஏராளமான அதிருப்தியைம், அதிர்ச்சியையும் தந்தபடியே உள்ளது..
இப்போது உச்சக்கட்டமாக ஒரு சம்பவம் அங்கு நடந்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது ஷைக்குபுரா என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் மொகமத் சாஜித்...
இவர் சம்பவத்தன்று தன்னுடைய நண்பர்கள் 4 பேரை கூட்டிக் கொண்டு, கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் ஒரு பகுதிக்கு சென்றிருக்கிறார்.
அப்போது ஒரு வீட்டில் சிறுமி தனியாக இருந்துள்ளார்.. அவர் பெயர் மரியா.. 15 வயது ஆகிறது.. தனியாக இருப்பதை பார்த்ததுமே மரியாவை 5 பேரும் கடத்த முயன்றனர்.. அவர்களை பார்த்தும் மரியா பயந்து கத்திகூச்சலிட்டார்..
ஆனால் அதற்குள் துப்பாக்கியை காட்டி மரியாவை மிரட்டி கடத்தி அங்கிருந்த ஆள் அரவமற்ற ஒரு பகுதிக்கு தூக்கி சென்றனர்.
24 மணி நேரம் அதாவது ஒரு நாள் முழுவதும் அந்த பெண்ணை 5 பேரும் மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்..
24 மணி நேரம் கழித்து, உயிருக்கு ஆபத்தான நிலையிலும், நிலைகுலைந்த நிலையிலும் மரியாவை திரும்பவும் தூக்கி வந்து, அவருடைய வீட்டிற்கு அருகே வீசிவிட்டு 5 பேரும் தப்பி சென்று விட்டனர்.
மகளின் கோலத்தை பார்த்து பெற்றோர் பதறி கதறினர்.. உடனடியாக போலீசில் இதை பற்றி புகார் செய்யவும், துரிதமான தேடுதல் வேட்டை நடக்கிறது..
5 பேரும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.. தலைமறைவாக உள்ள அவர்களை தேடும் பணி தொடர்கிறது.. 15 வயது சிறுமியை நாள் முழுவதும் நாசம் செய்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பரவி எதிரொலித்துள்ளது.
இதனால் சிறுபான்மையினர்கள் மீதான தாக்குதல், கொடூர பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன.,..
சம்பந்தப் பட்டவர்கள் 5 பேரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தமான வேண்டுகோளை முன் வைத்துள்ளது..
மேலும் #SpeakUpForPakMinorities என்ற ஹேஷ்டேக்கையும் பொதுமக்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.