ரத்தக் கசிவு ஏற்பட்டதால் 6 லுங்கிகளை மாற்றியுள்ளனர் !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணடைந்தனர். 
ரத்தக் கசிவு ஏற்பட்டதால் 6 லுங்கிகளை மாற்றியுள்ளனர்

பென்னிக்ஸின் மூத்த சகோதரியின் கணவர் வினோத் குமார் இது குறித்து கூறுகையில் ;

பென்னிக்ஸ் காவல் நிலையத்திற்கு செல்லும் வழியில், எனது துணைவியாரை தொலைபேசியில் அழைத்தார். தொலைபேசி அழைப்பை எதிர்பாராத விதமாக எங்களால் எடுக்க முடியவில்லை.
எனவே, பென்னிக்ஸ் தனது மற்றொரு சகோதரியை தொடர்பு கொண்டு தான் காவல் நிலையம் செல்லும் விசயத்தை தெரியபடுத்தினார். 

ஜெயராஜின் தங்கை கணவர் எஸ். ஜோசப் இது குறித்து கூறுகையில் ;

பென்னிக்ஸிட மிருந்து எந்த தகவலும் வராதாதால், நாங்கள் காவல் நிலையத்திற்கு விரைந்தோம். இருப்பினும், காவல் நிலையம் பூட்டிய நிலையில் இருந்தது. 

அதிகாலை 1.30 மணி வரை காத்திருந்தோம். எந்த முன்னேற்றமும் இல்லை. மறுநாள் காலை அடுத்த கட்ட நடவடிகையை மேற்கொள்ளலாம் என்ற முடிவோடு அங்கிருந்து கிளம்பினோம்.

ஜூன் 20 அதிகாலை, நாங்கள் காவல் நிலையத்திற்கு மீண்டும் விரைந்தோம். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்யுமாறு காவல்துறை எங்களிடம் தெரிவித்தது.
மேலும், அவர்களுக்கு ஒரு புதிய ஜோடி ஆடைகளையும் ஏற்பாடு செய்யுமாறு காவல்துறை தெரிவித்தது. வாகனத்தை ஏற்பாடு செய்தபின், நானும், எனது மனைவியும் அரசு மருத்துவமனை வரை வாகனத்தை பின் தொடர்ந்தோம்.

தூரத்திலிருந்து நாங்கள் பார்த்தோம். ஜெயராஜ், பென்னிக்ஸ் மோசமாக காயமடைந்தி ருந்தனர். அவர்களின் ஆடைகளை இரத்தத்தால் நனைக்கப் பட்டிருந்தது என்று எஸ். ஜோசப் மேலும் கூறினார்.

பென்னிக்ஸ் உடையில் ரத்தம் கசிந்திருந்ததால் வேஷ்டியைக் மாற்ற காவல்துறை யினர் அனுமதித்தனர். அப்போதும், கூட ரத்தம் அவர் உடம்பில் இருந்து வெளியேறியது. 

மற்றொரு வேஷ்டியைக் கொண்டு வரும்படி காவல்துறை எங்களிடம் கேட்டது. ஆனால், பென்னிக்சை மருத்துவமனை க்குள் அழைத்துச் செல்வதற்கு முன்பே அந்த வேஷ்டியும் ரத்தத்தால் நனைந்தது. 

பென்னிக்ஸ் கழற்றிய ஆடைகளை என் மனைவி எடுக்க போலீசார் அனுமதிக்க வில்லை. என்று ஜோசப் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து பென்னிக்ஸ் நண்பர் கூறுகையில் ; பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜிம் போலீஸ் காவலில் இருந்தனர். 

காவலர்கள் தாக்கியதால் இருவரும் 6 லுங்கியை மாற்ற வேண்டிய அளவுக்கு இரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது.

பென்னிக்ஸ் மலக்குடலில் இருந்து பெருமளவில் இரத்தப் போக்கு கொண்டிருந்தது. அவரது தந்தைக்கும் பின்னால் இருந்து இரத்தப் போக்கு வந்துள்ளது. 
முன்னதாக திமுக தலைவர் கனிமொழியும், பென்னிக்ஸின் ஆசனவாய் மீது காவல்துறை அதிகாரிகள் தடியை சொருகியுள்ளனர் என்று கூறியிருந்தார்.
Tags:
Privacy and cookie settings