கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டேயிருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் படுபவர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
கோவையிலும் கடந்த சில நாள்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது.
முக்கியமாக, வெளியூர்களில் இருந்து வருபவர்களின் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருந்தது.
இந்நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப் பட்டுள்ளது.
உடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 68 வயது முதியவர், ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி, வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவர்,
திருப்பூர் மாவட்டம் தெக்கலூரைச் சேர்ந்த 42 வயது ஆண் விருதுநகரைச் சேர்ந்த 19 வயது பெண், திருப்பூரைச் சேர்ந்த 24 வயது பெண்,
கணபதியைச் சேர்ந்த 23 வயது பெண் உள்ளிட்ட 9 பேர் பல்வேறு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தனர்.
அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நோய்த் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இவர்களில் 5 பெண்கள் கர்ப்பிணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் ஒரு கர்ப்பிணிக்கு சிசு கருவிலேயே உயிரிழந்து விட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தாய் காப்பாற்றப் பட்டார்.
அதேபோல, டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த 5 வயதுக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது.
டெல்லியி லிருந்து விமானம் மூலம் வந்த ஈரோட்டைச் சேர்ந்த 47 வயதுப் பெண், விருதுநகரைச் சேர்ந்த 21 வயதுப் பெண், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த 31 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது.
முக்கியமாக, துடியலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியர் ஒருவருக்கும் கொரோனா உறுதிபடுத்தப் பட்டுள்ளது.
இதை யடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் உடன் பணியாற்றியவர் களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனை மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.