ஒப்பனை கலைஞருக்கு ஆபாச போட்டோவை அனுப்பியதாக, தனது மகன் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கிறார் பிரபல அம்மா நடிகை.
பிரபல மலையாள நடிகை மாலா பார்வதி. இவர் தமிழில், விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படத்தில் கீர்த்தி சுரேஷ் அம்மாவாக நடித்துள்ளார்.
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர், எம்.ஏ.நிஷாத் இயக்கிய கேணி, அஸ்வின் சரணவன் இயக்கிய கேம் ஓவர் ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.
ஒப்பனை கலைஞர்
மலையாள டிவி. சீரியல்கள் மற்றும் விளம்பர படங்களிலும் நடித்துள்ள மாலா பார்வதி, சைக்காலஜிஸ்டும் கூட. இவரது மகன் அனந்த கிருஷ்ணன்.
கேரள மாநில திருநங்கை ஒப்பனை கலைஞர் சீமா வினித், கடந்த சில நாட்களுக்கு முன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு புகார் கூறியிருந்தார்.
அதில், பிரபல மலையாள நடிகையின் மகன் தனக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பியதாகக் கூறியிருந்தார்.
மன்னிப்புக் கேட்டார்
'கடந்த 2017ம் ஆண்டில் இருந்தே ஆபாசமான செய்திகளையும் அனுப்பி வருகிறார். அண்மையில் தான் அதை பார்த்தேன்.
பின்னர் என் பேஸ்புக் பதிவைக் கண்டு, மகன் செய்த செயலுக்கு அந்த நடிகை போன் செய்து மன்னிப்புக் கேட்டார். அவனை திருத்த முயற்சி செய்கிறேன். சட்டப்படி நடவடிக்கை முயன்றால் ஆதரவு அளிக்கிறேன் என்று சொன்னார்.
விரும்பவில்லை
அவருக்கு இதுபோன்று நேர்ந்திருந்தால் இப்படி சமாதானப்படுத்த முயல்வாரா? அந்த நடிகையின் பெயரை சொல்ல விரும்பவில்லை' என்று கூறியிருந்தார் சீமா வினித்.
இது பரபரப்பானது. பின்னர் அடுத்த சில மணி நேரங்களில், அந்த நடிகை மாலா பார்வதி என்றும், தனக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பியது அவர் மகன் அனந்த கிருஷ்ணன் என்றும் கூறினார்.
நீதி வேண்டும்
இதுபற்றி நடிகை மாலா பார்வதியும் பேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டார். அதில், இந்த விஷயத்தில் நஷ்ட ஈடு கொடுத்தால், சீமா விவகாரம் முடிந்துவிடும் என்று அவர் தரப்பில் கேட்கப் பட்டதாகக் கூறியிருந்தார்.
இது பரபரப்பானது. பின்னர், தான் நஷ்ட ஈடு கேட்கவில்லை என்றும் அப்படி கேட்டிருந்தால் அதற்கான ஆதாரத்தைக் காட்டட்டும், எனக்கு நீதி வேண்டும் என்றும் சீமா கேட்டிருந்தார்.
உண்மை வெளியே
இந்நிலையில், மாலா பார்வதி கூறியதாவது: என் மகனும் அவரும் சம்மதித்து தான் பேசியிருக்கி றார்கள். உண்மை வெளியே வர வேண்டும் என்பதால் போலீசில் புகார் அளித்திருக்கிறேன்.
மகனது செல்போனையும் ஒப்படைத்துள்ளேன். என் மகன் அனுப்பிய மெசேஜுக்கு தம்ஸ் அப் எமோஜியை சீமா கொடுத்துள்ளார். அந்த போட்டோ இருக்கிறது.
மகனை ஆதரிக்கவில்லை
நான் சீமாவை காயப்படுத்த விரும்பவில்லை. அவருக்கு ஆதரவாக இருப்பதால்தான் அதை பேஸ்புக்கில் பதிவு செய்யவில்லை. நான், என் மகனை ஆதரிக்கவும் இல்லை.
அவன் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனையை சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.