தெரியாதவர்களை வீட்டில் அனுமதிக்கும் போது எச்சரிக்கை !

1 minute read
நன்கு தெரிந்தவர்... அறிமுகமானவர் என்றால் கூட, பலமடங்கு எச்சரிக்கை தேவை. சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த மூன்று இல்லத்தரசிகள் சமீபத்தில் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறாரகள். 

அதன் பின்புலத்தை ஆராய்ந்தபோது ஊருக்கே அதிர்ச்சி. அந்த ஏரியாவில் டீக்கடை நடத்தி வரும் ஒருவனும், எலக்ட்ரீஷியனாக இருக்கும் அவனுடைய சகோதரனும் சேர்ந்து, 

அங்குள்ள வீடுகளில் பிளம்பிங் வேலை, எலக்ட்ரீஷியன் வேலை, கேபிள் போன்றவற்றுக்காக சென்று வருவது வழக்கம்.

இதைப் பயன்படுத்திக் கொண்டு பல வீடுகளின் பாத்ரூம்களில் மினியேச்சர் கேமராக்களை பொருத்தி, குளியல் காட்சிகளை வீடியோ பதிவு செய்து, அதேபகுதியைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கும் இந்த இருவரும் விற்றிருக்கிறார்கள்.

இது, சம்பந்தபட்ட பெண்களின் கவனத்துக்கு வந்து விட, சிலர் தற்கொலை முயற்சியில் குதித்து, காப்பாற்றப் பட்டுள்ளனர். பலர், வீட்டை விட்டு வெளியில் வராமல் மன உளைச்சலோடு முடங்கிக் கிடக்கிறார்கள்.

கயவர்கள் இருவர் உட்பட மேலும் சில இளைஞர்களை கைது செய்திருக்கிறது போலீஸ்.

கிராமமோ... நகரமோ... கேபிள், தண்ணீர் கேன், கேஸ் சிலிண்டர், எலக்ட்ரீஷியன் என எந்த வேலையாக இருந்தாலும் சம்பந்தபட்ட நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்கும் போது வேலை முடியும் வரை அவர்களை வீட்டில் உள்ள ஆண்கள் கண்காணித்தபடி இருப்பதே பாதுகாப்பது.

முக்கியமாக வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது இப்படிப்பட்ட நபர்களை அனுமதிக்காமல் குடும்பத்தினரில் ஆண்கள் சிலரும் இருக்கும்போது அனுமதிப்பதே சாலச்சிறந்தது.

நன்கு தெரிந்தவர்... அறிமுகமானவர் என்றால்கூட, பலமடங்கு எச்சரிக்கை தேவை! படித்து விட்டு சேர் செய்யுங்கள் மற்றவர்களும் பயன் பெறட்டும்.
Tags:
Today | 2, April 2025
Privacy and cookie settings