தின்பண்ட ஆசையில் வெடிகுண்டை கடித்த சிறுவன் - அதிர்ச்சி கொடுத்த பெற்றோர் !

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகாவில் உள்ளது அலகரை கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி. இவரின் 6 வயது மகன் விஷ்ணுதேவ், நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அதிர்ச்சி கொடுத்த பெற்றோர்

அப்போது, அவரின் வீட்டுக் கட்டிலில் இருந்த பொருளை தின்பண்டம் என எடுத்துச் சட்டென கடிக்கவே, அந்த ஏரியாவே அதிரும் அளவுக்குப் பலத்த சத்தம் கேட்டது. 

அடுத்த நொடியே, சிறுவன் விஷ்ணுதேவ் தலை சிதறி உயிரிழந்தான். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனின் உடலை மீட்டனர்.
இதை யடுத்து, அடுத்த சில மணி நேரத்தில் சிறுவன் விஷ்ணு தேவின் உடலை அவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போலீஸுக்குத் தெரியாமல் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் வைத்து எரித்து விட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் ரெஜினா மேரி தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

இதை யடுத்து, முசிறி போலீஸ் டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் தொட்டியம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கங்காதரன், மோகன்ராஜ், செல்வகுமார் ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், அலகரைச் கிராமத்தைச் சேர்ந்த கங்காதரன், தமிழரசன், மோகன்ராஜ் மூவரும் உறவினர்கள் என்றும் இவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி மீன் பிடிப்பது வழக்கம் என்றும் சொல்லப்படுகிறது. 

அதற்காக, நேற்று முசிறி அடுத்த பாப்பாபட்டி பகுதியில் உள்ள கல் குவாரி நடத்திவரும் செல்வகுமார் என்பவரிடம் நாட்டுவெடிகளை விலைக்கு வாங்கி யுள்ளனர்.
அதை யடுத்து, இவர்கள் மூவரும், முசிறி அடுத்த மணமேடு பகுதியிலுள்ள காவிரி ஆற்றில் நாட்டு வெடிகளை வீசி மீன் பிடித்துள்ளனர். 

பிடித்த மீன்களை அலகரையிலுள்ள சகோதரர் பூபதி என்பவர் வீட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர். 

அதைத் தொடர்ந்து, மீதமிருந்த ஒரு நாட்டு வெடியை அங்கிருந்த கட்டிலில் வைத்து விட்டு மீன்களைச் சுத்தம் செய்யச் சென்றுள்ளனர். 

அப்போது தான், சிறுவன் விஷ்ணுதேவ், நாட்டுவெடியை தின்பண்டம் என நினைத்து வாயில் கடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

கங்காதரன், மோகன்ராஜ், செல்வகுமார் ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீஸார், தமிழரசன், பூபதி உள்ளிட்ட வழக்கில் தொடர்புடையவர் களை தேடி வருகின்றனர்.
தின்பண்ட ஆசையில் வெடிகுண்டை கடித்த சிறுவன்

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் பகுதியில் அதிகமாக காணப்படும் நரி, மான், காட்டுப்பன்றி உள்ளிட்டவற்றை வெடி வைத்து வேட்டை யாடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

அந்த வகையில், நேற்று முன்தினம், வைக்கப்பட்ட நாட்டுவெடி வெடித்து நரி ஒன்று உயிரிழந்தது. 
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமை யிலான போலீஸார் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த ராம்ராஜ், சரவணன், ஏசுதாஸ், சரத்குமார் உள்ளிட்ட 12 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்தச் சம்பவங்கள் திருச்சி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளன.
Tags:
Privacy and cookie settings