வழுக்கை தலை உள்ளவர்களை குறி வைத்திருக்கிறதாம் கொரோனா.. இப்படி ஒரு அதிர்ச்சியை தூக்கி வழுக்கை மண்டையர் தலையிலேயே போட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த கொரோனா உலகத்துக்கு புதுசு.. இதை பற்றி இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை..
மருந்து தான் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பார்த்தால், இவைகள் வைரஸ் அறிகுறி, இவர்களை தான் இந்த வைரஸ் பாதிக்கும் என்று ஒரு முடிவுக்கே வரமுடியவில்லை.
நாளுக்கு நாள் இந்த வைரஸ் பற்றின ஆராய்ச்சி பீதியை எகிற வைத்து வருகிறது. அதன்படி இப்போது ஒரு தகவலை ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி, வழுக்கை தலை உள்ளவர்களை கொரோனா அதிகம் தாக்குமாம். இதை சொல்வது ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.
இதற்கு இவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால், "ஒருவருக்கு தலையில் வழுக்கை விழுவதற்கு காரணம் ஒருவித ஹார்மோன் ஆன்ட்ரோ ஜென்...
இந்த ஹார்மோன் தான் உடம்பில் உள்ள செல்களை தாக்க கொரோனாவிற்கு உதவி செய்கிறது.
கொரோனா பாதித்த ஆண்களின் இறப்பு சதவீதத்தை அதிகப்படுத்துவதில் இந்த ஹார்மோனுக்கு முக்கிய பங்கு உள்ளது...
அதாவது, இந்த வைரஸ் உடம்புக்குள் சென்று ஏற்படுத்தும் பாதிப்பு, சேதத்துக்கும், தலையில் உள்ள வழுக்கையை ஏற்படுத்தும் ஆன்ட்ரோ ஜென் ஹார்மோனுக்கும் நேரடியான தொடர்பு உள்ளதாம்.
நம் உடம்பில் உள்ள செல்களில் நுழைவு கதவாகத்தான் இந்த ஹார்மோன்கள் இருக்கின்றன. வழுக்கை உள்ளவர்களை இந்த கொரோனா தாக்கி விட்டால், அது படுவீரியத்துடன் உடலில் செயல்பட தொடங்கி விடுகிறது.
அதனால், கொரோனா தாக்கும் 70 சதவீத ஆண்களுக்கு தலையில் வழுக்கை உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்...
நம் நாட்டில் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேரை இந்த கொரோனா தாக்கி உள்ளது.. ஒன்றரை லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதில் எத்தனை ஆண்களுக்கு வழுக்கை என்று தெரியாது.. அதே சமயம் ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இப்படி ஒரு திடீர் குண்டை தூக்கி போட்டுள்ளதும் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை..
அதனால் இந்த ஆய்வை உறுதிப்படுத்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சியில் இறங்கி உள்ளனர்.