தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் மூவாயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருவதால் ஊரடங்கை உத்தரவை ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளி யிட்டுள்ளது தமிழக அரசு.
ஏற்கெனவே மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், மணிப்பூர் உள்ளிட்ட மாநில அரசுகள் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளதால் தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட ஊரடங்கு
நாளையுடன் (ஜூன் 30) முடிவடையுள்ள நிலையில் மேற்கண்ட பகுதிகளுக்கு மட்டும் ஜூலை 5ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப் படுகிறது.
ஜூலை 5ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலான சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு முடிவடைந்த பிறகு ஜுலை 6 முதல் ஜூலை 31ம் தேதி வரையில் முன்பிருந்த ஊரடங்கு நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடரும்.
மாவட்டங்களு க்கு இடையே அனுமதிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு பொது போக்குவரத்து சேவைகள் ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப் படுகிறது.
அதே போல, ஜூலை 5, 12, 19, 26 ஆகிய நான்கு ஞாயிற்றுக் கிழமைகளிலும் எவ்விதமான தளர்வுகளும் இன்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நன்றி கலைஞர் செய்தி
Tags: