தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் சென்னை பாண்டிபஜாரில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்று ஊரடங்கு தளர்வு காரணமாக சமீபத்தில் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
அப்போது கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு கொரோனா இருந்ததாக தெரிகிறது. இதனால் அக்கடையின் உரிமையாளர் உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் கடை உரிமையாளரின் மனைவி, மகன்கள், மருமகள்கள், மற்றும் பேரக் குழந்தைகள் உட்பட 20 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்
அவர்கள் சென்னை தி நகரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல் வெளியானது.
இருப்பினும் கடை உரிமையாளரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவ மனையில் உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இதனிடையே கடந்த 18 ஆம் தேதியிலிருந்து சென்னை, காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில்
முழு பொது முடக்கம் அமல் படுத்தப்பட்ட நிலையில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.