தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முதலில் சென்னை மற்றும் அதற்கு அண்டை மாவட்டங்களாக உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளிலேயே அதிகளவில் இருந்து வந்தது.
தற்போது மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தினந்தோறும் குறிப்பிடத்தக்க வகையில் கொரோனாவால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை உறுதியாகி யுள்ளது.
இதன் காரணமாக சென்னைக்கு நிகராக தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனாவால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் தினந்தோறும் மூவாயிரத்துக்கும் மேலான கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி சிவராஜ் நகரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 65 வயது ஆண், 60 வயதான அவரது மனைவி, 20, 19 வயது மகன்கள், 15 வயது மகள் ஆகியோருக்கு கடந்த 22ல் கொரோனா உறுதியானது.
அவர்கள் அனைவரும் வேலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இதை யடுத்து, அக்குடும்பத்தி னருக்கு எவ்வாறு தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பதை விசாரித்ததில் அதிர்ச்சி தகவலே வெளியாகி யுள்ளது.
அதில், காட்பாடி பகுதியில் உள்ள ஓடப்பிள்ளையார் கோவில் தெருவில், 20 வயதுடைய இளைஞர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் நடந்துச் சென்றிருக்கிறார்.
அப்போது, அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலிஸாரை கண்டதும், மாஸ்க் அணியாமல் வெளியே வந்ததற்கு அபராதம் விதிப்பார்கள் என அஞ்சி, சாலையில் கிடந்த உபயோகித்த முகக் கவசத்தை எடுத்து அணிந்திருக்கிறார்.
அதனுடையே வீட்டுக்சென்ற அந்த இளைஞரால் குடும்பத்தினர் அனைவருக்கும் தொற்று பரவியது கண்டறியப் பட்டுள்ளது.
முகக்கவசங்களை கையாளும் முறையை தெரியாமலும், ஊரடங்கு விதிமுறைகளை முறையாக கடைப் பிடிக்காத விளைவால் முதியவர்கள் உட்பட
அனைவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி யிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி யுள்ளது.
முன்னதாக வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 118 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியது உறுதியானது. அதையடுத்து மொத்த பாதிப்பு 1011 ஆகவும் அதிகரித்துள்ளது..... நன்றி கலைஞர் செய்தி...