ஜூன் மாதத்தில் வங்கிகள் இத்தனை நாட்கள் விடுமுறையா?

இந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 11 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது
ஜூன் மாதத்தில் வங்கிகள் விடுமுறையா?

தற்போது ஊரடங்கு இம்மாத இறுதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் வங்கிகளின் வேலை நாட்கள், விடுமுறை தினம் பற்றி அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

ஜூனில் மொத்தம் 11 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. 
ஜூன் 7, ஜூன் 14, ஜூன் 21, ஜூன் 28 ஆகியவை ஞாயிற்றுக் கிழமை என்பதால் அன்றைய தினங்கள் வழக்கம் போல வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

ஜூன் 13ம் தேதி 2வது சனிக்கிழமை. 27ம் தேதி 4வது சனிக்கிழமை என்பதால் இவ்விரண்டு நாட்களிலும் வங்கிகள் இயங்காது. 

ஜூன் 5ம் தேதி புத்த மதத்தின் சகா தவா பண்டிகை. சிக்கிம் மாநிலத்தில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

ஜூன் 15ம் தேதி ராஜ சங்க்ராந்தி பண்டிகையை முன்னிட்டு புவனேஷ்வர் மற்றும் ஐசாவால் நகரங்களில் மட்டும் வங்கிகள் செயல்படாது. 

ஜூன் 18ம் தேதி குரு கோவிந்த் சிங் பிறந்தநாளை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத யாத்ராவை முன்னிட்டு ஜூன் 23ம் தேதியில் ஒடிசாவில் அனைத்து வங்கிகளும் இயங்காது. 

ரெம்னா நி ஒப்பந்த தினத்தை முன்னிட்டு மிசோரம் மாநிலத்தில் வங்கிகள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings