இறைச்சி சந்தையில் கொரோனா - சீனாவில் அதிகரிக்கும் வைரஸ் பரவல் !

கொரோனாவால் இன்று உலகம் சந்தித்து வரும் மோசமான நிலைக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது சீனா தான். 
இறைச்சி சந்தையில் கொரோனா

கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஹூபே மாகாணத் தலைநகரான வுஹானில் இருக்கும் ஒரு இறைச்சி சந்தையி லிருந்து கொரோனா பரவியதாகக் கூறப்பட்டது. 

அதன்பிறகு, மொத்த ஹூபே மாகாணமும் முடக்கப்பட்டு, அங்கு மக்கள் நடமாடக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

இதனால் ஹூபேவை தவிர சீனாவின் பிற இடங்களில் வைரஸ் பரவல் பெரிதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
3 மாத போராட்டத்துக்குப் பிறகு, சீனாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கில் முழுத் தளர்வு அறிவிக்கப்பட்டது. 

சீன மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி இரண்டு மாதங்கள் ஆன நிலையில், தற்போது அங்கு மீண்டும் கொரோனா வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

ஆனால், இந்த முறை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. பெய்ஜிங் நகரில் இருக்கும் ஜின்ஃபாடி (Xinfadi) என்ற மொத்த விற்பனை சந்தை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. 

சமீபத்தில், இறைச்சி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த இருவர், அந்த சந்தைக்கு வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவர் மூலம் சந்தை முழுவதும் வைரஸ் பரவியிருக்கலாம் என பெய்ஜிங் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் இருவருக்கு எப்படி தொற்று உறுதியானது எனத் தெரிவிக்கப்பட வில்லை, 

ஆனால் பெய்ஜிங்கில் நேற்று ஒரேநாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
அதில், 7 பேருக்கு அறிகுறி இல்லாமல் தொற்று உறுதியாகி யுள்ளதும் அவர்களில் 6 பேர் பெய்ஜிங்கில் இருக்கும் சந்தைக்குச் சென்று வந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

முதன் முறையாக சீனாவில் கொரோனா பாதிப்பு உருவாகி மீண்டும் சந்தைகள் திறக்கப்பட்ட போது, இந்த ஜின்ஃபாடி சந்தையில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விற்பனை ஆகிய வற்றிற்குத் தடை விதிக்கப் பட்டிருந்தது. 

பெய்ஜிங் மட்டுமல்லாது சீனாவின் பெரும்பாலான நகரங்களில், ஆடு, மாடு இறைச்சியின் மொத்த விற்பனைக்குத் தடை விதிக்கப் பட்டிருந்தது. 

இருந்தும் தற்போது அந்த சந்தைக்குச் சென்ற பலருக்கு கொரோனா உறுதியாகி யுள்ளதால், ஜின்ஃபாடி சந்தை முற்றிலும் மூடப்பட்டுள்ளது.
சீனாவில் அதிகரிக்கும் வைரஸ் பரவல்

மேலும், சந்தையைச் சுற்றியுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, குடியிருப்புகள் முழுவதும் முடக்கப் பட்டுள்ளன. 

அந்தச் சந்தையைச் சுற்றி நூற்றுக் கணக்கான போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் சந்தையில் இருக்கும் இறைச்சிகளை வெளியேற்றி வருகின்றனர்.
அதேபோல், இந்தச் சந்தையிலிருந்து வாங்கப்பட்ட இறைச்சிகள் எந்த ஹோட்டல், ரெஸ்டாரண்டுகளிலும் விற்பனை செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

ஜின்ஃபாடி சந்தையில் பணி செய்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்து, அவர்களின் குடும்பத்தினரைக் கண்காணிக்கவும் பெய்ஜிங் சுகாதாரத் துறை உத்தர விட்டுள்ளது. விகடன்...
Tags:
Privacy and cookie settings