தமிழகத்தில் லாக்டவுனை மீண்டும் அமல்படுத்தும் திட்டம் எதுவுமே இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு இன்று நீர் திறந்து விடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் நீரை இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
அனைவரும் தவறாமல் முகக் கவசம் அணிய வேண்டும்; வெளியில் சென்று விட்டு திரும்பினால் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். குறிப்பாக சென்னையில் முக கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும்.
தமிழகத்தில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தும் திட்டம் இல்லை. தமிழகத்தில் லாக்டவுன் மீண்டும் கடுமை யாக்கப்படும் என்று வெளியான செய்திகள் தவறானவை.
என்னுடைய பெயரில் அப்படி செய்திகளை வெளியிட்டவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் மக்கள் மிக நெருக்கமாக இருப்பதால் தான் கொரோனா தொற்று அதிகமாக ஏற்படுகிறது.
பொதுமக்கள் தேவையே இல்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேன்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.